அர்த்த சிரசாசனம் தொடர்ச்சியாக செய்து வந்தால், தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது. அர்த்த சிரசாசனம் செய்து வந்தால், மூளை நரம்பு செல்களின் அழிவு தடுக்கப்படும்.
அர்த்த சிரசாசனம் தொடர்ச்சியாக செய்து வந்தால், தலைக்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.
அர்த்த சிரசாசனம் செய்து வந்தால், மூளை நரம்பு செல்களின் அழிவு தடுக்கப்படும். இரத்தக்குழாய்களில் நுண் அடைப்புகள் எல்லாம் நீங்கி விடும். தலைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும். தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதால் கண்பார்வைக் கோளாறுகள் சரியாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். பெரும்பான்மையான காது, மூக்கு, தொண்டை பாதிப்புகள் சீராகும். பிட்யூட்ரி, தைராய்டு சுரப்பிகளின் இயக்கம் சீராகும். அர்த்த சிரசாசனம் ஆசனத்தின் செய்முறையைப் பார்க்கலாம்.
நல்ல காற்றோட்டமான இடத்தில், மென்மையான விரிப்பின் மீது அமர்ந்து, பின் மெதுவாக குனிந்து உச்சந்தலையை தரையில் குத்திட்டு, முன் கைகள் முட்டியின் உதவியால் உடம்பை செங்குத்தாக உயர்த்தவும். அதன் பின் கைவிரல்களைக் கோர்த்த நிலையில் பின் தலைக்கு ஆதரவாக வைத்து கொள்ளவும். உங்களின் இடுப்பிலிருந்து கால்களை நேராகத் தரையில் பாதங்களை பதித்து குறுங்கோண வடிவில் நிறுத்தவும். இந்த ஆசனத்தை காலையில் மட்டும் 15 வினாடிகள் வரை தக்க இடைவெளி விட்டு இரண்டு முறை செய்யலாம். இந்த ஆசனம் செய்து விட்டு, சாதாரண நிலைக்கு திரும்பும் போது தரையிலிருந்து தலையை மிக நிதானமாக உயர்த்தவும். முதல் முறை பயிற்சியை மேற்கொள்பவர்கள், ஆசனம் நன்றாக செய்ய தெரிந்தவரின் உதவியுடன் செய்ய துவங்கவும்.