தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு (மூன்றும் சேர்ந்து) – ஒரு கப்,
சின்ன வெங்காயம் – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4,
இஞ்சி – ஒரு துண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – கால் கப்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சின்னவெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை கலந்து ஊற வைக்கவும். தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும்.
மாவில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், சேர்த்துக் கலக்கவும்.
பிறகு, உப்பு போட்டு கலக்கவும்.
சூடான தவாவில் எண்ணெய் தடவி, மாவை கரண்டி அளவு விட்டு வட்டமாக, கொஞ்சம் கனமாக தேய்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விடவும். நடுவில் துளை செய்து கொஞ்சம் எண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் திருப்பி போடவும். நன்கு வெந்து பொன் முறுவலாக வந்ததும் எடுக்கவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய அடை ரெடி.