முகத்தின் அழகை கூட்ட நாம் பலவகையான ஃபேஸ்பேக்குகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் தற்போது சிவப்பழகைத் தரக்கூடிய ஃபேஸ்பேக்கினை எப்படி செய்வது என்றும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.
சிவப்பழகு பெற கற்றாழை ஃபேஸ்பேக்!!
தேவையானவை:
கற்றாழை ஜெல்- 1 கப்
காட்டேஜ் சீஸ்- சிறிதளவு,
பேரிச்சம் பழம்- 1
வெள்ளரிக்காய்- 1
செய்முறை:
கற்றாழை ஜெல்லுடன் காட்டேஜ் சீஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனுடன் பேரிச்சம்பழத்தினை நசுக்கிக் கலக்கவும்.
இறுதியாக வெள்ளரிக்காயினை துண்டுகளாக்கி தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டினை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டினை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால் முகமானது சிவப்பழகு பெறும்.