சுவையான கருவேப்பிலை குழம்பு செய்முறை..! Karuveppilai kuzhambu recipe in tamil..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கருவேப்பிலை குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  1. கருவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு.
  2. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  3. சுண்ட வத்தல் – 5
  4. தேங்காய் துருவல் – இரண்டு ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் – 2
  6. கடுகு – ஒரு ஸ்பூன்
  7. சீரகம் – ஒரு சிட்டிகை
  8. வெங்காயம் – 1/4 கப் பொடிதாக நறுக்கியது
  9. பூண்டு – 10 பற்கள் பொடிதாக நறுக்கியது
  10. பெருங்காயம் தூள் – ஒருஸ்பூன்
  11. குழம்பு மசாலா தூள் – 3 ஸ்பூன்
  12. தக்காளி – ஒன்று பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்
  13. புளி தண்ணீர் – ஒரு கப்
  14. உப்பு – தேவையான அளவு

கருவேப்பிலை குழம்பு செய்முறை:-

ஸ்டேப்: 1

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றுங்கள் எண்ணெய் நன்கு சூடேறியதும், அவற்றில் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலையை சேர்த்து நன்றாக பொரித்ததெடுக்கவும்.

ஸ்டேப்: 2

பின் அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடேறியதும், அவற்றில் ஐந்து சுண்ட வத்தலை பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

இப்பொழுது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் பொரித்த கருவேப்பிலை, சுண்ட வத்தல், இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

பின் அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 50 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள், எண்ணெய் சூடேறியதும் இரண்டு காய்ந்த மிளகாய், கடுகு ஒரு ஸ்பூன் மற்றும் சீரகம் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக பொரியவிடுங்கள்.

ஸ்டேப்: 5

பிறகு ஒரு கைப்பிடியளவு பொடிதாக நறுக்கிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள், பின் ஒரு ஸ்பூன் பெருங்காயம் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 6

அதன் பிறகு மூன்று ஸ்பூன் குழம்பு மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நன்கு பேஸ்ட்டு போல் அரைத்த தக்காளி விழுதினை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதாவது எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு நன்கு வதக்க வேண்டும்.

ஸ்டேப்: 7

பின் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி கொதிக்கவிடுங்கள், பின் அரைத்து வைத்துள்ள கருவேப்பிலை விழுதினை இவற்றில் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

ஸ்டேப்: 8

குழம்பு நன்கு கொதித்ததும் ஒரு கப் புளி தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிடுங்கள், பின் மூடி போடு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

இப்பொழுது சுவையான மற்றும் ஆரோக்கியமான கருவேப்பிலை குழம்பு தயார், ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment

Translate »