காலா ஜாமுன் (Kala Jamun) செய்ய தேவையான பொருட்கள்
- இனிப்பில்லாத கோவா – 200 கிராம்
- பன்னீர் – 100 கிராம் (துருகியது)
- மைதா – 3 மேசைக்கரண்டி
- சர்க்கரை – 2 கப்
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- ரோஸ் எசன்ஸ் – 1/2 தேக்கரண்டி
- குங்குமப்பூ
- எலுமிச்சை சாறு
- தண்ணீர்
- எண்ணெய்
காலா ஜாமுன் செய்முறை ஸ்டேப்: 1
காலா ஜாமுன் (Kala Jamun) செய்வதற்கு முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இரண்டு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்
சர்க்கரை கரைந்த பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஏலக்காய் தூள், குங்குமப்பூ, ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். அவ்வளவு தான் சர்க்கரை பாகு தயார்.
காலா ஜாமுன் செய்முறை ஸ்டேப்: 2
அடுத்து இனிப்பில்லாத கோவா மற்றும் பன்னீர் சேர்த்து நன்குபிசைந்து கொள்ளவும்.
பிசைந்த கலவையில் மைதா மாவு 3 மேசைக்கரண்டி சேர்த்து 10 நிமிடங்கள் வரை நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும்
பின்பு பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
காலா ஜாமுன் செய்முறை ஸ்டேப்: 3
இப்பொழுது காலா ஜாமூனை பொரிப்பதற்கு அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடேறியதும். உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் நன்கு பொன்னிறமாகும் வரை பொறிக்கவும்
பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
சுவையான மற்றும் எளிமையான காலா ஜாமுன் (Kala Jamun) தயார் இப்பொழுது அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள்.