ட்ரை ஃப்ரூட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்
- பேரிச்சம்பழம் – 1 கப்
- வெந்நீர் – தேவையான அளவு
- பாதாம் – 1/4 கப்
- வால்நட் – 1/4 கப்
- முந்திரி – 1/4 கப்
- பிஸ்தா – 1/4 கப்
- உலர் திராட்சை – 1 மேசைக்கரண்டி
- சாரைப்பருப்பு – 1 தேக்கரண்டி
- முலாம்பழ விதைகள் – 2 தேக்கரண்டி
- நெய் – தேவையான அளவு
- ஏலக்காய் தூள் – சிற்றிதளவு
- சர்க்கரை – 1/2 கப்
- தண்ணீர் – 1/2 கப்
ஹல்வா செய்முறை ஸ்டேப்: 1
ஒரு கப்பில் வெந்நீர் எடுத்து அதில் கொட்டை எடுத்த பேரீச்சம்பழத்தை சேர்த்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்பு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் 1/4 கப் தண்ணீர் மற்றும் 1/4 சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சி வைக்கவும்
பின் அடுத்து அடுப்பில் ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடேற்றிய பின்பு அதில் பாதாம், வால்நட்ஸ், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு வறுத்து வைக்கவும்
ஹல்வா செய்முறை ஸ்டேப்: 2
அதே கடாயில் நெய் சேர்த்து அதில் உலர் திராட்சை, சாரைப்பருப்பு, முலாம்பழ விதைகள் சேர்த்து வறுத்து வைக்கவும்.
இப்பொழுது ஊறவைத்த பேரீச்சம்பழத்தை மிக்சியில் மைபோல் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்பு வறுத்த பருப்புகளையும் மிக்சி ஜாரில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஹல்வா செய்முறை ஸ்டேப்: 3
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அரைத்த பேரிச்சம்பழம், சர்க்கரை பாகு, அரைத்த பருப்புகளையும் சேர்த்து நன்குகிளற வேண்டும்.
பின் இதில் சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நன்கு கெட்டி பதம் வரும் வரை கலக்கவும்.
அதன் பிறகு ஒரு கிண்ணத்தில் சுற்றிலும் நெய் தடவி இந்த பேரீச்சம்பழ கலவையை ஊற்றி அதன் மேல் வறுத்த பருப்புகளை தூவி பரிமாறவும்.