தக்காளி ஒன்றே போதும்..! முகத்தை பளிச்சென்று மாற்றிவிடும்..! Tomato Beauty Tips For Face..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

முகத்தை ஜொலிக்க வைக்க டிப்ஸ் :

தேவையான பொருள்:

  1. காய்ச்சாத பால் – சிறிதளவு 
  2. தக்காளி – பாதியான அளவு

செய்முறை விளக்கம்:

முகம் நல்ல வெள்ளையாக மாறுவதற்கு முதலில் காய்ச்சாத பாலில் நறுக்கிய பாதி தக்காளியை பாலில் நனைத்து முகத்தில் மெதுவாக மசாஜ் போல் செய்ய வேண்டும். அடுத்து கையால் மெதுவாக தேய்த்து விட வேண்டும். மசாஜ் போல் செய்த பிறகு 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். இதை நீரால் உடனே வாஷ் செய்ய கூடாது. டவல் எடுத்து ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

சருமம் பளிச்சென்று மாற டிப்ஸ்(Tomato Face Scrub):

தேவையான பொருள்:

  1. சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன் 
  2. தேன் – 1 ஸ்பூன் 
  3. தக்காளி – நறுக்கிய பாதி 

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் 1 ஸ்பூன் அளவிற்கு தேனை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். தேன் பயன்படுத்துவதால் புருவ முடிகள் வெள்ளையாகிவிடும் என்று நினைக்காதீர்கள். தேனை அனைத்து வித சரும பிரச்சனைகளுக்கும் தீர்வு வகிக்கும்.

இப்போது கலந்து வைத்ததை முதலில் பாதியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியில் இந்த கலந்த தேனை தக்காளியில் தடவி முகத்தில் மசாஜ் போல் மெதுவாக செய்து 5 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 5 நிமிடம் கழித்து டவலால் ஹாட் ஆன நீரில் நனைத்த பிறகு தொடைக்க வேண்டும்.

தேவையான பொருள்:

  1. கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பால் பவுடர் / பால் – சிறிதளவு 
  3. நறுக்கிய பாதி தக்காளி 

செய்முறை விளக்கம்:

முகத்தினை அழகுபடுத்த ஃபேஸ் மாஸ்க் செய்வதற்கு ஒரு பவுலில் கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அந்த கடலை மாவுடன் பால் அல்லது பால் பவுடர் சேர்த்து கொள்ளவும். அடுத்ததாக நறுக்கிய பாதி தக்காளியின் சாறு சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். அடுத்து கலந்த பிறகு முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து நீரில் முகத்தினை வாஷ் செய்து கொள்ளலாம். முகத்தில் இருந்து இதனை வாஷ் செய்த பிறகு சோப் பயன்படுத்தாமல் நீங்கள் உபயோகப்படுத்தும் ஃபேஸ் வாஷை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த 3 டிப்சையும் பின்பற்றி வந்தால் கண்டிப்பாக சருமமானது நல்ல வெள்ளையாக மாறி மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்..!

Related Posts

Leave a Comment

Translate »