தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியான ஹேர்பேக் ட்ரை பண்ணுவதைவிட, இப்போது சொல்லப்போகும் செம்பருத்திப் பூ ஹேர்பேக் போடலாம். இன்று இந்த ஹேர் பேன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ இலைகள் – 10
கறிவேப்பிலை – கைப்பிடியளவு,
மருதாணி இலை – கைப்பிடியளவு
செய்முறை:
செம்பருத்திப்பூ இலைகள், கறிவேப்பிலை, மருதாணி இலை இவை மூன்றையும் லேசாக தண்ணீர்விட்டு அரைத்து தலையில் தேய்க்கவும்.
அதன்பின்னர் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளித்தால் முடியானது கட்டுக்கடங்காமல் வளரும். மேலும் இளநரை, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், நுனியில் முடி வெடித்தல் என்பது போன்ற பிரச்சினைகளையும் போக்கச் செய்யும்.