சினை முட்டைகளை பத்திரப்படுத்தி மாதந்தோறும் வெளியிடும் முக்கியமான வேலையைச் செய்கிற சினைப்பை மெனோபாஸூக்கு பிறகே ஓவ்வெடுக்க ஆரம்பிக்கும். அரிதாக சில பெண்களுக்கு பிறவியிலேயோ அல்லது இளவயதிலேயோ சினைப்பை வேலை நிறுத்தம் செய்யலாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் எனப்படுகிற இது முறையற்ற மாதவிலக்கு, மலட்டுத் தன்மை போன்றவற்றை உண்டாக்குவதோடு மெனோபாஸ் வந்துவிட்ட மாதிரியான அறிகுறிகளையும் காட்டுமாம். ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் ஏற்படக் காரணங்கள் அது உண்டாக்கும் பிரச்சனைகள் தீர்வுகள் என எல்லாவற்றையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட வயசுக்கு முன்னாடியே சினைப்பை தன் வேலையைச் செய்யறதை நிறுத்திக்கிற இந்தப் பிரச்சனைக்கு பரம்பரைத் தன்மை காரணமாக இருக்கலாம். எதிர்பு சக்தி இல்லாத சிலருக்கு அவங்களோட உடம்புக்குள்ள இருக்கிற திசுக்களை அவங்க உடம்பே அட்டாக் செய்யறதும் காரணமாகலாம்..
கர்ப்பப்பை அறுவை சிகிச்சை இடுப்பெலும்பு தொடர்பான அறுவை சிகிச்சை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபி, ரேடியேஷனோட விளைவுகளாலும் சினைப்பையோட இயக்கம் நின்று போகலாம்.
மாதவிலக்கு மாசம் தவறி வருவது அல்லது நின்று போவது உடம்பெல்லாம் சூடாகி வியர்த்துக்கொட்டறது எரிச்சல், மனஉளைச்சல், தாம்பத்திய உறவில் நாட்டம் இல்லாதது சரியான தூக்கமில்லாதது இந்தப் பிரச்சனையோட அறிகுறிகள்
அத்தனையும் கிட்டத்தட்ட மொனோபாஸ் அறிகுறிகளைப் போலவே இருக்கும். மாதவிலக்கு சுழற்சி மாறினாலோ நின்னுட்டாலோ மருத்துவரை அணுகணும். ரத்தத்துள உள்ள எஃப். எஸ்.ஹெச் அளவு சரிபார்க்கப்படும்.
எஃப்.எஸ்.ஹெச் தான் மாசந்தோறும் சினைமுட்டைகளை வெளியேத்தச் சொல்லி உடம்புக்கு சிக்னல் தரும். ரத்தத்தில் அதோட அளவு மாறியிருக்கிறதை வச்சு ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் இருக்கானு கண்டு பிடிக்கலாம். தவிர ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ரொம்ப குறைஞ்சு, எஃப்.எஸ்.ஹெச் அதிகமாறதும் இந்தப்பிரச்சனைக்கு காரணம்.
பெரும்பாலும் மலட்டுத் தன்மைன்னான சிகிச்சைகளை ஆரம்பிக்கும் போது தான் பல பெண்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறதே தெரிய வரும். ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபி மூலமா இந்தப் பிரச்சனையோட பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
அது எலும்புகளோட ஆரோக்கியத்தையும் காப்பாத்தும். கருத்தரித்தலை பாதிக்கிறதால இள வயது பெண்களுக்குத்தான் இது கவலை தரும் பிரச்சனை. அப்படிப்பட்டவங்க கருமுட்டை தானம் மூலமா குழந்தை பெறலாம். ப்ரீமெச்சூரியன் ஓவரியன் ஃபெயிலியர் உள்ள பெண்களுக்கு எலும்புகள் மெலியலாம். நீரிழிவும், இதய நோய்களும் பாதிக்கலாம்.
சரியான நேரத்துக்கு சிகிச்சை, கொழுப்பில்லாத சரிவிகித உணவு, உடற்பயிற்சி டாக்டரோட அறிவுரைப்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி எடுத்துக்கிறதெல்லாம் அவங்களோட ஆரோக்கியத்துக்கு உதவும்.