இட்லி மாவில் பகோடா செய்வது எப்படி..! Evening Snacks Recipes in tamil..! Tea Time Snacks..!

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

சுவையான இட்லி மாவு பகோடா (Evening Snacks Recipes in tamil) – தேவையான பொருட்கள்:

  1. இட்லி மாவு – 1 கப் 
  2. பெரிய வெங்காயம் – 2 (நீட்ட வடிவில் அறிந்தது)
  3. கொத்தமல்லி – தேவையான அளவு 
  4. கருவேப்பிலை – தேவையான அளவு 
  5. பச்சை மிளகாய் – 1
  6. உப்பு – தேவையான அளவு 
  7. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் 
  8. ஜீரகம் – 1/4 ஸ்பூன் 
  9. எண்ணெய் – (பக்கோடா பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு)

சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 1:

முதலில் 1 கப் கெட்டியான இட்லி மாவு எடுத்துக்கொள்ளவும். இட்லி மாவுடன் 2 பெரிய வெங்காயம் அறிந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.

சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை(Evening Snacks Recipes in tamil) Steps 2:

அதன்பிறகு கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும். அடுத்ததாக இதனுடன் 1 பச்சை மிளகாய் நறுக்கியதை சேர்த்துக்கொள்ளவும்.

சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 3:

அடுத்து தேவையான அளவுக்கு உப்பு மட்டும் 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். அடுத்து இதுல ஜீரகம் கொஞ்சம் சேர்த்துக்கோங்க. விருப்பம் இல்லாதவர்கள் ஜீரகம் சேர்க்காமல் கூட செய்யலாம். ஜீரகம் நம்ம மனதுக்கு மட்டுமே சேர்க்கிறோம்.

சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 4:

பகோடா பொரித்து எடுக்க தேவையான அளவு எண்ணெய் நன்றாக காய்ந்து இருக்கணும்.

நன்றாக காய்ந்த எண்ணெயில் ரெடி பண்ண மாவை கையால் எடுத்து எண்ணெயில் உதிர்த்து போட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து எண்ணெயில் போட்ட பக்கோடாவை திருப்பி விடவேண்டும். உடனே திருப்பி போட்டால் மாவுடன் எல்லாம் ஒட்டி வரும் என்பதனால் சிறிது நேரம் பின்னரே எடுக்க வேண்டும்.

சுவையான இட்லி மாவு பகோடா செய்முறை (Evening Snacks Recipes in tamil) Steps 5:

அவ்ளோதாங்க இந்த இட்லி மாவு பகோடா ரெடிங்க. எல்லாரும் கடலை மாவுல தான் பகோடா செய்வாங்க. இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிப்பிங்க. இட்லி மாவுல செய்ற புது வகையான பகோடா. கண்டிப்பா இந்த சுவையான இட்லி மாவு பகோடாவ நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Related Posts

Leave a Comment

Translate »