kuthiraivali-Ragi-Koozh-Barnyard-millet-ragi-kool_குதிரைவாலி கூழ்

குதிரைவாலி கூழ் செய்வது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

குதிரைவாலி கூழ் செய்ய தேவையான பொருட்கள்:

  1. குதிரைவாலி அரிசி – 50 கிராம்,
  2. கேழ்வரகு மாவு – 200 கிராம்,
  3. உப்பு – தேவைக்கேற்ப,
  4. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 5,
  5. தயிர் – 1/2 கப்,
  6. தண்ணீர் – தேவையான அளவு

குதிரைவாலி கூழ் செய்முறை (Gramiya Samayal) ஸ்டேப் :1

முந்தைய நாள் இரவே 200 கிராம் கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும்.

குதிரைவாலி கூழ் செய்முறை (Gramiya Samayal) ஸ்டேப் : 2

ஒரு பாத்திரத்தில் குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும் அதில் ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும்.

குதிரைவாலி கூழ் செய்முறை (Gramiya Samayal) ஸ்டேப் : 3

தண்ணீரில் கையை நனைத்துக் கொண்டு, கூழைத் தொட்டுப் பார்த்தால், அது கையில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்பொழுது இறக்கவும்.

குதிரைவாலி கூழ் செய்முறை ஸ்டேப் : 4

பின் ஆறியதும் தயிர், சின்ன வெங்காயம், உப்பு, தண்ணீர் விட்டு கரைத்து பரிமாறவும்.

குதிரைவாலி கூழ் பயன்கள்

குதிரைவாலி கூழ் பயன்கள் :1

குதிரைவாலியில் அதிகளவு  கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளுக்கு நல்ல வலிமை தரும். மேலும் இவற்றுள் இரும்புசத்து நிறைந்துள்ளதால் இரத்த உற்பத்திக்கு உதவுகிறது.

குதிரைவாலி கூழ் பயன்கள் :2

குதிரைவாலியில் அதிகளவு  நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய பெரிதும் உதவுகிறது.

குதிரைவாலி கூழ் பயன்கள் :3

பெண்கள், இதய நோயாளிகள் இந்த குதிரைவாலி கூழ் அதிகளவு உண்டுவர உடலுக்கு மிகவும் நல்லது.

Related Posts

Leave a Comment

Translate »