பிரசவத்திற்கு பின் இதெல்லாம் செய்யக்கூடாது என்பது ஏன்?

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

கருவுற்ற காலத்தில் வெளித் தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை.  உள்ளுக்குள், ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறுபட்டுப் போகிறது.

இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற்றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பி விடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும்.

சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும். குழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக் கூடாது..! பச்சைத் தண்ணில கை வைக்காதே..!

குழந்தைக்குப் பால் கொடுக்கும் போது மல்லிகைப்பூ ஆகாது! மாம்பழமா. கூடவே கூடாது!’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில் இதெல்லாம் தேவையில்லாத பயங்கள் தான்! இன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும் தான் சாப்பிடக் கொடுப்பார்கள்.

இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரண மாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பது தான் சிறந்தது.
அப்படிக் கொடுத்தால் தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும். நார்மலான டெலிவரிக்கே சில சமயங்களில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம்.

இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண்ணீரே கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள். தண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்து விடும் என்பது அவர்களின் விளக்கம்.

இந்தத் தண்ணீர்க் கட்டுப்பாடு சில நாட்கள் தான் என்றில்லை… சில மாதங்கள் வரைகூட தொடரும்! இதுவும் மிகவும் தவறான விஷயம். உண்மையில் இந்தச் சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால் தான் தாய்க்கு நீர்க்கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

குழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத் தாங்கி ஏந்திய தாயின் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலைக்கு வந்து விடும். அந்தச் சமயத்தில் ரத்தப் போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக்கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்குமேல் போனால் தவறு. தாயின் கர்ப்பப்பையில் நோய்த் தொற்று ஏதேனும் ஏற்பட்டிருந்தால் இப்படி ஆகலாம்.

சில சமயம் தாயின் கர்ப்பப் பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளி வராமல் விட்டுப் போயிருந்தாலும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்படலாம்.

Related Posts

Leave a Comment

Translate »