தேவையான பொருட்கள்:
- தக்காளி – 5 (பெரியது)
- காய்ந்த மிளகாய் – 4
- மிளகு – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 3/4 தேக்கரண்டி
- பெருங்காயம் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – 2 குழிக்கரண்டி
- கடுகு, உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
மிளகு கார சட்னி (pepper chutney) செய்முறை:
மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை தயாராக வைத்து கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி, மிளகாயை சிவக்க வறுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மிளகை போட்டு வெடித்ததும் உடனே எடுத்துக் விடவும். (மிளகாயை எடுத்ததும் அடுப்பை அணைத்துவிட்டு மிளகை போடவும். இல்லையென்றால் வெடித்து சிதறும்.)
அடுப்பை அணைத்து வைத்து, வாணலி சூட்டில் வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.
மீண்டும் அடுப்பை எரியவிட்டு, வாணலியில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி, பெருங்காயம் தூவி, தக்காளியை போட்டு உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்றாக குழைய வதங்க வேண்டும். வதங்கிய பின்னர் எடுத்து, வறுத்த எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து வெடித்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்த சட்னியில் கொட்டி கலந்து விடவும்.
சுவையான மிளகு கார சட்னி (pepper chutney) தயார். இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.