Evening Snacks: வீட்டுல உள்ள பொருட்களை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் ஈஸி ஆன மொறு மொறு snacks எப்படி செய்யலாம்னு பாப்போம்..! குழந்தைகளுக்கு கடைல வாங்கி கொடுப்பதை தவிர்த்து வீட்டிலே நாம் இந்த Recipesஐ செய்து கொடுக்கலாம். குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அரிசி மாவு சிப்ஸ் (Rice Flour Recipes) – தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 200 கிராம் (1கப்)
- தண்ணீர் – 1 டம்ளர் அளவு
- எண்ணெய் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
மொறு மொறு அரிசி மாவு சிப்ஸ் செய்முறை/ Rice Flour Recipes:
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 1:
முதலில் ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். பின் அவற்றில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன் பிறகு 1 சொட்டு எண்ணெய் மற்றும் தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 2:
அதன் பிறகு 200 கிராம் அரிசி மாவு அதாவது 1 கப் அளவிற்கு உள்ள அரிசி மாவை அதனுள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளற வேண்டும். 2 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து கடாயை இறக்கி வைக்க வேண்டும். பின் அந்த மாவை சிறிதளவு தண்ணீர் தெளித்து அதாவது இடியாப்பம் மாவு போன்று நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 3:
இப்பொழுது மாவு நல்லா ஆறுனதுக்கு அப்பறம் கையில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து நன்றாக மாவை பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சப்பாத்தி கட்டையில் மாவை உருண்டையாக உருட்டி தேய்த்து கொள்ளுங்கள். ஓர பகுதிகளை கத்தி வைத்து கட் பண்ணிக்கோங்க. உங்களுக்கு எந்த வடிவத்துல வேணுமோ அது மாறி கட் பண்ணிக்கோங்க.
இந்த அரிசி மாவு சிப்ஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவாங்க. இத குழந்தைகளுக்கு ஸ்கூல்க்கு கூட தாராளமா நம்ம செஞ்சி குடுக்கலாம்.
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை (Evening Snacks) Steps 4:
இப்பொழுது அடுப்பில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் நல்லா ஹீட் ஆனதும் அடுப்பை மிதமான சூட்டில வைத்து கட் பண்ணி வெச்சிருக்க அரிசி மாவு சிப்ஸ எண்ணெய்ல போட்டு எடுத்துக்கோங்க. மிதமான கலர்ல வந்ததும் சிப்ஸ எடுத்துடுங்க.
கடைசியா சிப்ஸ வேற பாத்திரத்தில் கொட்டிட்டு உங்களுக்கு தேவையான அளவுக்கு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். மிளகாய் தூளுடன் சாட் மசாலா சேர்த்து கொள்ளலாம் இன்னும் நிறைய சுவை கிடைக்கும். இது புடிக்காதவர்கள் சேர்த்து கொள்ளாமல் கூட சாப்பிடலாம். இவ்வளவு தாங்க இந்த அரிசி மாவு சிப்ஸ் தயார்.