இறால் கறிவேப்பிலை தேன் வறுவல்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

இறால் – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
வெள்ளை மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு (பொரிக்க)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
பூண்டு – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சில்லி பேஸ்ட் – 1 டீஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – அரை டீஸ்பூன்
கார்ன்ஃப்ளேக்ஸ் – 50 கிராம் (நொறுக்கியது)

பேட்டர் செய்ய:

கார்ன்ஃப்ளார் – 2 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை, உப்பு, வெள்ளை மிளகுத்தூள் – தலா ஒரு சிட்டிகை

இறால் கறிவேப்பிலை தேன் வறுவல்

செய்முறை

இறாலைக் கழுவி சுத்தம் செய்து, அதன் நடுவே நன்கு கீறி விடவும்,  ஆனால், இறாலை இரண்டாகப் பிளக்கக் கூடாது.

பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பேட்டர் செய்ய கொடுத்தவற்றை ஒரு பவுலில் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைக்கவும்.

இறாலை ஒவ்வொரு பீஸாக எடுத்து பேட்டரில் புரட்டி எடுத்து நொறுக்கிய கார்ன் ஃப்ளேக்ஸில் போட்டு புரட்டவும்.

இப்படி அனைத்து பீஸ்களையும் கார்ன்ஃப்ளாரில் புரட்டி தனியாக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டுக்கு வந்ததும் இறாலைப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

இதில் கறிவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் தண்ணீர் ஊற்றி சில்லி பேஸ்ட், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ் ஊற்றி சாஸ் பதத்துக்குக் கொதித்ததும் அதில் பொரித்த இறாலைச் சேர்த்துப் புரட்டி தேன் ஊற்றிப் பரிமாறவும்.

இறாலை மட்டும் பொரித்தெடுத்து கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து, மேலே தூவியும் சாப்பிடலாம்.

இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Related Posts

Leave a Comment

Translate »