சப்பாத்திக்கு அருமையான ப்ரோக்கோலி கிரேவி

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்:

ப்ரோக்கோலி – கால் கிலோ
சீரகம் – அரை டீஸ்பூன்
ஏலக்காய் – 2
வெங்காயம் – பாதி
இஞ்சி பூண்டு விழுது – முக்கால் டீஸ்பூன்
தக்காளி விழுது – அரை கப்
முந்திரி – 5
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலா – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

ப்ரோக்கோலி

செய்முறை:

முதலில் ப்ரக்கோலியை துண்டுகளாக எடுத்து சுடு தண்ணீரில் உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.

முந்திரியை விழுதாக அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், சீரகம், ஏலக்காய் சேர்த்து தாளித்த பின்னர்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தொடர்ந்து, அரைத்து வைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேகவிடவும்.

அத்துடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிடவும்.

பின்னர், அரைத்து வைத்த முந்திரி விழுது, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.

இந்நிலையில், ப்ரக்கோலி சேர்த்து கிளறி மூடிப்போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான ப்ரக்கோலி கிரேவி ரெடி..!

Related Posts

Leave a Comment

Translate »