இனிப்பு அதிகம் சேர்த்தால் உங்கள் அழகான சருமம் பாதிக்கப்படும் என்பதை உணர்வீர்களா?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உணவில் நாம் சேர்த்துக்கொள்கிற அதிகப் படியான சர்க்கரை, ரத்தத்தில் கலந்து, நம் சருமத்தின் இரண்டாம் அடுக்கான டெர்மிஸில் உள்ள எலாஸ்டின் மற்றும் கொலாஜென் செல்களுடன் சேரும். அப்போது கிளைகேஷன் என்ற ரசாயன மாற்றம் நிகழும். அப்போது ஏஜிஈ (AGE- Advanced Glycation End Products) எனப்படும் தேவையற்ற மூலக்கூறுகள் வெளியேற்றப்படும். இவை மெள்ள மெள்ள டெர்மிஸ் லேயரில் படியத் தொடங்கும். எலாஸ்டின் மற்றும் கொலாஜென் திசுக்களின் வேலையே சருமத்தை மீள்தன்மையோடு இறுக்கமாக வைத்திருப்பதுதான்.

ஏஜிஈ படிவது அதிகரிப்பதால் எலாஸ்டினும் கொலாஜெனும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையைத் தக்கவைக்கும் திறனை இழக்கின்றன. சருமம் தொய்வடைந்து, களைப் புடனும் முதிர்ச்சியுடனும் மாறும். இதைத் தவிர்க்க லோ கிளைசெமிக் இண் டெக்ஸ் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

ஓர் உணவை உண்ணும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவானது எவ்வளவு சீக்கிரம் அதிகரிக்கிறது என்பதைக் காட்டுவதே கிளைசெமிக் இண்டெக்ஸ். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை சேர்த்த, மாவுச்சத்து நிறைந்த உணவுகள் போன்றவை அதிக கிளெசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை. பழுப்பு அரிசி, நார்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலமுள்ள உணவுகள் போன்றவை குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டவை.

அதிக இனிப்புச்சத்துள்ள உணவுகளை உண்பது சருமத்தில் வீக்கம், பருக்கள், எக்ஸீமா எனும் பிரச்னை, சோரியாசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். சீக்கிரமே ஏற்படும் முதுமைத்தோற்றம், இனிப்பு உணவுகளின் மீதான தொடர் ஈர்ப்பு, காரணமற்ற உடல் உப்புசம் போன்றவற்றை உணர்ந்தால் நீங்கள் அதிக இனிப்பு உணவுகளை உண்பதாக அர்த்தம். மேலும், உடலின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும். தூக்கமின்மை பிரச்னை வரும். தொடர்ச்சியாக பருமனும் அதிகரிக்கும். இவை எல்லாம் நீங்கள் அதிக சர்க்கரைச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் அறிகுறிகள்.

Related Posts

Leave a Comment

Translate »