தேவையான பொருட்கள் :
கற்பூரவள்ளி இலை – 5
சுக்கு – ஒரு சிறிய துண்டு
மிளகு – அரை டீஸ்பூன்
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்
தக்காளி சாறு – 2 கப்
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கற்பூரவள்ளி இலையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும்.
இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
மற்றொரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம் தயார்.