கேரட் ஃபேஸ் மாஸ்க் அனைத்து வகையான சரும வகையினருக்கும் ஏற்றது. கேரட்டில் ஆன்டி-செப்டிக் பண்புகள் உள்ளது. இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். சரும பராமரிப்பிற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைத் தவிர்த்து, இயற்கை பெருட்களான கேரட்டைக் கொண்டு மாஸ்க் போடும் போது, சருமம் நன்கு சுவாசித்து ஆரோக்கியமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். கேரட் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதோடு, சருமத்திலும் பல மாயங்களைப் புரியக்கூடியது.
குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளிகளை அதிகம் கொண்டவர்கள், அதனைப் போக்க வீட்டில் உள்ள கேரட் வைத்தே போக்கி, முக அழகை மேம்படுத்தலாம். இப்போது கெமிக்கல் பொருட்களின் உதவியின்றி, கேரட் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்பதைக் காண்போம்.
கேரட் ஃபேஸ் மாஸ்க் எப்படி வேலை செய்கிறது?
* கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது ப்ரீ-ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படுத்து பாதிப்புக்களைத் தடுத்து, சரும செல்களுக்கு பாதுகாப்பளிக்கும்.
* முக்கியமாக கேரட்டில் இருக்கும் வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைப்பதோடு, சூரியக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கும்.
* கேரட் கொலாஜன் உற்பத்திக்கு உதவி புரிந்து, சரும அழகை மேம்படுத்தும். * கேரட்டில் இருக்கும் பொட்டாசியம், சரும செல்களுக்கு நீர்ச்சத்தை வழங்கி, சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
* குறிப்பாக கேரட்டில் இருக்கும் முக்கியமான உட்பொருளான பீட்டா-கரோட்டீன், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, புதிய சரும செல்களின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இப்போது இவ்வளவு நன்மைகள் நிறைந்த கேரட்டைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடலாம் என்பதைக் காண்போம்.
முகப்பரு நீங்க.. முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், இந்த மாஸ்க்கைப் போடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
* கேரட் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* தேன் – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கேரட்டை துண்டுகளாக்கி, 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின் வேக வைத்த கேரட்டை நன்கு மசித்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதனை முகத்தில் தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டால், பருக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, சீக்கிரம் பருக்கள் காணாமல் போகும்