கல்வித் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு

by admin

பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகளுக்கு தாயார்தான் வீட்டுப் பாடம் சொல்லிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இந்த விஷயத்தில் தந்தை போதுமான ஈடுபாடு காட்டுவதில்லை என்ற மனக்குறை பிள்ளைகளிடமும் உருவாகி இருக்கிறது. அதே நேரத்தில் சமீபகாலமாக கற்றல் விஷயத்தில் தந்தையின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கான ஆன்லைன் கற்றல் தளம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்றவர்களில் 21.4 சதவீதம் பிள்ளைகள் தங்கள் படிப்பு விஷயத்தில் தந்தையின் ஈடுபாடு அதிகரித்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள். ஊரடங்கு கால கட்டத்திற்கு முன்பும் தந்தையின் பங்களிப்பு அதே மாதிரிதான் இருந்தது என்று 48.6 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

வீட்டுப்பாடம் செய்யும்போது டிஜிட்டல் தளங்களை கையாள்வதற்கும், புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் எளிமையாக கற்கும் யுக்தியை தெரிந்து கொள்வதற்கும் தந்தை உதவி செய்வதாக 34.1 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள். படிப்பில் தாங்கள் சாதிப்பதற்கு ஏதாவதொரு வகையில் தந்தையின் பங்களிப்பு இருப்பதாக 76.3 சதவீதம் பேர் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் தளங்கள் வழியாக கல்வி சார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு தந்தை வழிகாட்டுவதாகவும் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, ஆய்வு செய்த ஆன்லைன் கற்றல் மையத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் பைசானி கூறுகையில், “ஆன்லைன் கற்றல் தளங்கள் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களிடமும் பிரபலமடைந்து வருகின்றன. ஆன்லைன் கற்றல் தளங்கள் வழியாக பெற்றோர் கற்றுக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கு எளிமையாக புரியவைக்கிறார்கள். பள்ளிகள் திறந்ததும் நேரடி பாடத்திட்ட முறையில் பாடம் பயில தொடங்கினாலும் ஆன்லைன் கற்றல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு தொடரும் என்று நம்புகிறோம்” என்கிறார்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »