குழந்தைகளுக்கு படிப்பை புகட்டும் அப்ளிகேஷன்கள்..

by admin

ஸ்மார்ட்போன்களில் ஆன்லைன் கல்வி கற்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பயனுள்ள அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொடுங்கள். அவர்களின் கல்வி அறிவு அதிகரிக்கும். கூடவே பொது அறிவும் கூடும்.

டாக்டர் பாண்டாஸ் ஐஸ் கிரீம் டிரக்(Dr.Panda’s Ice Cream Truck)

ஐஸ்கிரீம் பிடிக்காத சுட்டிகள் உண்டா? அதனால்தான் ‘உங்களுக்குப் பிடித்த பிளேவர்களில் நீங்களே ஐஸ்கிரீமை உருவாக்குங்கள்’ என்கிறது, ‘டாக்டர் பாண்டா’ ஆப்ஸ்.

டாக்டர் பாண்டா, ஒரு தள்ளுவண்டி மூலம் ஐஸ்கிரீம் விற்பவர். அவரிடம் இருக்கும் பொருட்களைக்கொண்டு, விதவிதமான ஐஸ்கிரீம்களை நீங்களே உருவாக்கலாம். ஐஸ்கிரீம் மட்டுமல்ல, இன்னும் பல வற்றைக் கற்றுத்தரும்படியான பல அப்ளிகேஷன்ஸ், டாக்டர் பாண்டா ஆப்ஸில் இருக்கிறது.

கிளவுட் மேக்கர் (Cloud Maker)

வானத்தில் உலாவும் மேகங்களில், விதவிதமான உருவங்களைக் கண்டுபிடித்து ரசிப்பது, சுவாரசிய மான விளையாட்டு. அப்படி, உங்கள் கற்பனையை வளர்க்கும் அழகு ஆப்ஸ் இது. இதில் வரும் மேகங்களை உங்கள் விருப்பப்படி மாற்றி, பட்டாம்பூச்சி, பறவை, குதிரை என விதவிதமான உருவங்களை உருவாக்கலாம்.

டோகா லேப்(Toca Lab)

வேதியியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அசத்தல் ஆப்ஸ் இது. தனிம வரிசை அட்டவணையில் உள்ள அனைத்துத் தனிமங்கள் பற்றியும் இதில் அறியலாம். முதலில், ஒரே ஒரு தனிமம் வழங்கப்படும். அதன் மூலம் பல சோதனைகள் செய்யும்போது, உங்களின் ஆய்வு முடிவுகள் வெளியாவது செம ‘த்ரில்லிங்’காக இருக்கும். உண்மையான ஆய்வகங்களைப் போல விபத்துக்கள் எதுவும் ஏற்படாது என்பதால், தைரியமாகச் செய்துபார்த்து, உங்கள் வேதியியல் அறிவை வளர்த்துக்கொள்ள லாம்.

பிக்கபூ யூ.எப்.ஓ(Peekaboo UFO)

ஐந்து வயதுக்குக் குறைவாக இருக்கும் சுட்டிகளின் கவனிப்புத்திறனை வளர்க்கும் விளையாட்டு ஆப்ஸ் இது. வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்திருக்கும் கிரகவாசிகள், நமது சுற்றுப்புறத்தில் ஒளிந்திருப்பார்கள். மரங்கள், பறவைகள், விலங்குகள், கட்டிடங் கள் மத்தியில் கலந்திருக்கும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதன் மூலம், நமது பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களின் வடிவங் கள், எளிதாக மனதில் பதியும். 

Visits:

Related Posts

Leave a Comment

Translate »