சுவையான மீன் கட்லெட் செய்வது எப்படி ?

by admin

சமைக்க தேவையானவை

  •  ப்ரெட் க்ரம்ப்ஸ் – 3/4 கப்
  •  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை – கால் கப்
  •  எண்ணெய் பொரிக்க – அரை கப்
  •  முட்டை – ஒன்று
  •  வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒன்று
  •  உப்பு – ஒரு தேக்கரண்டி
  •  பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – 2 கொத்து
  •  பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – ஒரு தேக்கரண்டி
  •  வெங்காயம் – 2
  •  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 3
  •  மீன் – அரை கிலோ

உணவு செய்முறை : மீன் கட்லெட்

  • Step 1.முதலில் மீன் துண்டுகளில் மஞ்சள் தூள், மிள்காய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து பாதிவேகும் அளவுக்கு பொரித்து எடுக்கவும். அதிகம் எண்ணெய் வேண்டாம் என நினைப்பவர்கள் வெறும் உப்பு மட்டும் சேர்த்து வேக வைத்து பொடித்து கொள்ளுங்கள்.
  • Step 2.அதிகம் வாசனை இல்லாத வகை மீன் தான் நல்லது. பிறகு 2 தேக்கரண்டி எண்ணெய் காயவைத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நல்ல பொன்னிறத்துக்கு வதக்கவும். அதில் நறுக்கின இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • Step 3.பிறகு பொரித்து சிறு சிறு துண்டுகளாக பிய்த்துப் போட்ட மீனை சேர்த்து மேலும் வதக்கவும். கொத்தமல்லி இலையும், மசித்த உருளைக்கிழங்கும் சேர்த்து கலக்கி கையில் வடை போல் தட்டவும். முட்டையை கட்டியில்லாமல் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். ப்ரெட் க்ரம்ப்ஸை ஒரு பரந்த பாத்திரத்தில் பரவலாக கொட்டி வைக்கவும்.
  • Step 4.பின்பு தட்டிய மீன் வடைகளை முட்டையில் முக்கி ப்ரெட் க்ரம்ப்ஸில் பிரட்டி எடுக்கவும். இப்படி எல்லா வடைகளையும் பிரட்டி எடுத்து ஃப்ரிசரில் 10 நிமிடம் வைத்தால் ப்ரெட் க்ரம்ஸ் வடைகளோடு நன்கு ஒட்டியிருக்கும். பிறகு கால் கப் எண்ணெய் காயவைத்து நாண்ஸ்டிக் பானில் ஆறோ அல்லது அதற்கும் மேற்பட்ட வடைகளையோ போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »