உடலுக்குள் உணவு நகர்வது எப்படி?

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

உணவுக்குழாயை சுற்றி இருக்கும் தன்னிச்சை தசைகள் வாயில் இருக்கும் உணவை விழுங்கியவுடன், உணவுக் கவளத்தின் பின்னிருந்து தசையை அழுத்தத் தொடங்குகின்றன. இது ஒரு அலைபோல உருவாகி உணவு இரைப்பையைச் சென்றடையும் வரை தொடர்கிறது. இந்த அலைகளை ‘தசைச்சுருக்க அலைகள்’ என்று அழைக்கிறார்கள். நாம் விழுங்கிய உணவு அலையின் வேகத்தில் பயணிப்பதாலும் அல்லது அலையைவிட வேகமாகப் பயணிப்பதாலும், அந்த தசைச்சுருக்க அலை இரைப்பையை சென்றடைந்து விடுகிறது.

இடையே உணவு எங்கேனும் தேங்கி நின்றுவிட்டால், அதன் பின்னிருந்து இன்னொரு அலை புறப்பட்டு உணவை நகர்த்தி இரைப்பைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இந்த தசைச்சுருக்க அலையை மூளையின் அடித்தண்டு கட்டுப்படுத்துகிறது. உணவு நகர்ந்து விட்டதா, இல்லையா? என உணவுக் குழாயைச் சுற்றி இருக்கும் நரம்புகள் தொடர்ச்சியாக மூளைக்குத் தகவலை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன.

நாம் உண்ட உணவு இரைப்பையில் அமிலம், பிற நொதிகளுடன் கலந்து அரைக்கப்பட்டுக் கூழாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர் உணவுக் குழாயில் நடக்கும் தசைச்சுருக்கம் போன்ற, ஆனால் குறைந்த தொலைவு பயணிக்கிற தசைச்சுருக்க அலைகள் மூலம் சிறுகுடலுக்கு நகர்த்தப்படுகிறது. இது செரிமான மண்டலத்தில் மட்டும் அல்ல, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அமைப்பான நிணநீர் சுரப்பிகளில் இருந்து நிணநீர்க் குழாய்கள் சுற்றி இருக்கும் தசைகளின், தசைச்சுருக்க அலைகள் வழியாகவே உடலெங்கும் கடத்தப்படுகிறது. இந்த தசைச்சுருக்க அலை இருப்பதால்தான் விண்வெளியில், விண்வெளி வீரர்களால் உணவருந்த முடிகிறது. ஈர்ப்புவிசைதான் உணவை நகர்த்துகிறது என்றால் மனிதர்களால் விண்வெளியில் தாக்குப்பிடிக்கவே முடியாது.

Related Posts

Leave a Comment

Translate »