இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…

by admin

பொதுவாக வீட்டில் இருக்கும் போதாவது ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்றே கூறப்படுகிறது. நம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே ஆயுர்வேத முறையில் நம்மையும், நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். அது பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு தேவையானவை அனைத்தும் இரண்டே பொருட்கள் தான்.

சமீபத்தில் கூட, ஜூஹி சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேம்பு மற்றும் மஞ்சள் தூளை வைத்து வீட்டிலேயே ஆயுர்வேத முறையில் காற்று சுத்திகரிப்பான் தயார் செய்வது எப்படி என்பது குறித்து பதிவிட்டிருந்தார்.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆயுர்வேத சுத்திகரிப்பான்

ஒரு சுத்திகரிப்பானால் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவதற்கு முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா, கோவிட்-19 இந்த வகையில் மிக மோசமாக தாக்குவதற்கு முன்பு வரை, நாம் அனைவரும் இதை பற்றி மறந்துவிட்டோம். ஆம், நடிகை ஜூஹி சாவ்லா, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆயுர்வேத காற்று சுத்திகரிப்பானின் செய்முறையை வெளியிட்டதோடு, “வீட்டில் ஒரு சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்படுத்தாமல் அறையை சுத்தப்படுத்த முடியும் என்றும், அதற்கு நம் சமூகத்தை ஒரு முறை பார்த்த பின்பாவது, ஆயுர்வேதத்தை நம்ப தொடங்க வேண்டும். கோவிட்-19 ஆயுர்வேதத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியதோடு, மேலும் இது உங்கள் வீட்டையும் கைகளையும் சுத்தப்படுத்தும் ஒரு அற்புத வழிமுறை என்று குறிப்பிட்டுள்ளார்.”

நேச்சுரல் சானிடைசர் மற்றும் காற்று சுத்திகரிப்பான் செய்முறை:

கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசரை, வெறும் வேம்பு மற்றும் மஞ்சள் கொண்டு சுலபமாக வீட்டிலேயே தயாரித்திட முடியுமா? ஆம், முடியும். வாருங்கள் இப்போது அதன் செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

* ஒரு பவுளில் வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளவும். அவை புதிதாகவும், சுத்தமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒருவேளை அவற்றில் அழுக்குகள் ஏதேனும் இருந்தால், ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமாக நீரில் வேப்பிலைகளை நனைத்து, மென்மையாக கைகளால் கழுவிடவும்.

* கழுவி எடுத்து வைத்துள்ள வேப்பிலையுடன், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். * அடுத்ததாக, அந்த பௌல் நிறைய தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.

* தயார் செய்த அந்த நீர் கலவை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் காற்று சுத்தமாவதோடு, அவற்றை கைகளை சுத்தம் செய்யும் சானிடைசராகவும் உபயோகிக்கலாம்.

மஞ்சளில் உள்ள ஆரோக்கிய பலன்கள்:

* சருமத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. அவற்றில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் சருமத்தின் மீதுள்ள புண்கள் மற்றும் காயங்களை குணப்படுத்தக்கூடியது.

* மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்திடும். * வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

* மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு வழங்கக்கூடியது.

* நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கக்கூடியது.

* இன்சோமினியா எனும் தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்லது.

* இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் கலந்த பால் குடித்துவிட்டு தூங்குவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »