வித்தியாசமான சுவையில் பாறை மீன் குழம்பு

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள்

பாறை மீன் – அரை கிலோ
துருவிய தேங்காய் – அரைக் கப்
மஞ்சள்தூள் – 1டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2டேபிள்ஸ்பூன்
மல்லித் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
நல்ல மிளகு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
வெங்காயம் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 1
புளி தண்ணீர் – அரை கப்
பூண்டு – 10 பல்
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு

பாறை மீன் குழம்பு

செய்முறை

மீனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

பின்னர் அதில் புளித்தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தேங்காய், நல்ல மிளகு, மஞ்சள் தூள், மிளகு, சீரகம், மல்லித்தூள், மிளகாய் தூள், பூண்டு, சின்னவெங்காயம், மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அரைத்த மசாலாவை புளித்தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

இப்பொழுது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை மீனோடு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

இப்பொழுது இந்த கலவையோடு தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

கொதித்த பின்பு மிதமான சூட்டில் மீதி 10 நிமிடம் வேகவிடவும்.

கடைசியாக சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

இப்போது சுவையான பாறை மீன் குழம்பு ரெடி.

Related Posts

Leave a Comment

Translate »