நம் முன்னோர்கள் யோகாசனத்திலேயே பலவித நோய்களை குணபடுத்தும் முறையை கையாண்டு உள்ளார்கள். அம்முறைகள் உடலுக்கும், மனதிற்கும் வலிமையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியது. அவ்வாறு உடல் எடையை குறைப்பதற்கு எளிமையான யோகா முத்திரையை பற்றி பார்போம்.
செய்முறை
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தர வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ள வேண்டும்.இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.
அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.
மேலும் பல இடங்களில் யோகாசன முறைகள் வரிசைபடுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அன்பர்கள் அதை பின்பற்றி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.