பச்சிளம் குழந்தைகளும்… பற்களின் பாதுகாப்பும்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தில் முக்கிய பங்காற்றுபவை பற்கள். பால் பற்கள்(விழுந்து முளைக்கும் தன்மை கொண்டவை) பராமரிப்பில் தொடங்கும் ஆரோக்கியம் வயோதிக காலம் வரை நீடிக்கும். அதைக் கருத்தில் கொண்டு இளம் பெற்றோர்களுக்கு, மழலைகளின் மயக்கும் புன்னகைக்குக் காரணமான பற்களைப் பாதுகாக்கும் எளிய டிப்ஸ் இதோ…

ஒவ்வொரு முறையும் பால் புகட்டிய பின்னர் சுத்தமான, கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில், மஸ்லின் போன்ற மெல்லிய துணியை நனைத்து, ஈறுகள் மற்றும் நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்கள் குழந்தை வளர வளர அவர்களைப் பிரஷ் பண்ணும் பழக்கத்திற்குக் கொண்டு வர சிரமப்பட வேண்டியதில்லை.    

மழலையின் முதல் ஸ்பரிசம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று பச்சிளம் குழந்தைக்கான முதல் பிரஷும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் செல்லத்திற்கான பிரஷை வாங்கும்போது முன்பக்கம் சிறிதாகவும், நைலான் இழைகளைக் கொண்டுள்ளதாகவும் பார்த்து வாங்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கான பேஸ்ட்டைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையான முறையில் தயாரான, ஃப்ளோரைட் சேர்க்கப்படாத, மழலைக்கு ஏற்ற பற்பசையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு முன்னர் பல் மருத்துவர்/குடும்ப மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பதும் சிறப்பு.

ஆரம்பத்தில் குழந்தைகள் அடம் பிடிக்கும். பற்களைத் தேய்த்த பிறகு எச்சிலுடன் கலந்த பேஸ்ட்டை எவ்வாறு துப்புவது என்பது தெரியாது. பெரும்பாலான குழந்தைகள் ஒன்றரை வயதிலேயே பிரஷ் செய்யும் விதத்தைக் கற்றுக்கொள்கின்றன. விதிவிலக்காக, ஒரு சில குழந்தைகளுக்குத்தான் இதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன. அதனால் பொறுமையுடன் கற்றுக் கொடுக்கவும்.

Related Posts

Leave a Comment

Translate »