தேவையான பொருட்கள்
முளைக்கீரை – 1 கட்டு
கடலைப்பருப்பு, உளுந்து – தலா 100 கிராம்
பெரிய வெங்காயம் – 1
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
ப.மிளகாய் – 1
பெருங்காய தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை
கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடலைப்பருப்பு, உளுந்தை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நன்றாக ஊறியதும் வடை மாவு பதத்தில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், ப.மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சூப்பரான முளைக்கீரை வடை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.