தேவையான பொருட்கள்
கம்பு மாவு – 1 கப்
வெங்காயம் – 1
ப.மிளகாய் – 2
கறிவேப்பிலை
உளுத்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 1
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
![கம்பு](https://img.maalaimalar.com/InlineImage/202008211104520935_1_kambu._L_styvpf.jpg)
செய்முறை
முழு கம்பை வறுத்து அரைக்க வேண்டும் அல்லது கம்பு மாவை நன்றாக வறுத்து கொள்ளவேண்டும்.
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு வறுத்து வைத்த கம்பு மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும்.
கை பொறுக்கும் சூட்டில் சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை பதத்திற்கு பிடிக்க வேண்டும்.
பிடித்த கொழுக்கட்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கம்பு மாவு கொழுக்கட்டை ரெடி.