பெண் தொழில் முனைவோருக்கு ஆலோசனைகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

பெண் தொழில் முனைவோர்கள் தொழிலுக்கு தேவையான திறமைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் தொழிலில் வெற்றிபெற முடியும். அதற்கு இதோ சில ஆலோசனைகள்.

* தொழிலுக்கு தேவையான செயல்களை மற்றவர்கள் சுட்டிக்காட்டும் முன்பாக செய்து முடித்து விட வேண்டும்.

* நமது குறிக்கோளை அடைவதற்கு ஏற்படும் தடைகளை விடாமுயற்சியுடன் தகர்த்தெறிய வேண்டும். கடின உழைப்போடு விடாமுயற்சி வேண்டும்.

* தொழில் சார்ந்துள்ள புதிய கண்டுபிடிப்புகள் புதிய நுட்பங்களை அறிந்து அதை உடனே உபயோகப்படுத்தி கொள்ளும் திறன் அவசியமாகும்.

* உற்பத்தி செய்யும் பொருளின் தரத்தை மேம்படுத்த புதிய தொழிற்நுட்பங்களை அறிமுகப்படுத்தியும் அதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தக்க தீர்வு காணும் ஆர்வமோடு இருக்க வேண்டும்.

* முறையான திட்டமிடல் 50 சதவீத வெற்றியை அளித்து விடும். நமது குறிக்கோளை அடைய ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு செயலாற்றுவது அவசியமாகும்.

* குறைந்த செலவில் தரமான பொருட்களை உற்பத்தி செய்து தொழிலில் வெற்றி பெறும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

* உற்பத்தி பல்வேறு கட்டிடங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அரசு நிறுவனங்கள் முதலியவற்றை ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன் படைத்திருக்க வேண்டும்.

* தொழிலாளர்கள் மேற்பார்வையாளர் உள்ளிட்ட மற்றவர்களை ஊக்கப்படுத்தியும், கொடுத்தப்பணியை நிறைவேற்றி விட்டார்களா என்கின்ற கண்காணிப்பும் அவசியம். அவர்கள் செய்த தவறுகளைச்சுட்டிக்காட்டி சரியான முறையில் வழி காட்டும் திறமை அதி முக்கியமாகும்.

* தொழில் முனைவோர்களுக்கு தன் மீது தனது திறமையின் மீதும் அசைக்க முடியாது தன்னம்பிக்கை இருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டாலும் துவண்டு விடாமல் மீண்டும் முயற்சி செய்ய தன்னம்பிக்கை தான் அடிப்படையாகும்.

* பணி செய்வோர் உற்பத்தியில் ஈடுபடுவோர் வாடிக்கையாளர் இவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு திட்டமிட்டு நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். அப்போது தான் முழுமையான ஒத்துழைப்பும், ஆதரவும் நமக்கு கிடைக்கும்.

* தொழிலில் ஈடுபடும் தொழில் முனைவோர் கட்டுக் கோப்பான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பது முக்கியம். காலம் தவறாமை, நேர்மை, சொன்ன வாக்கை காப்பாற்றுதல் போன்ற பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும். சுறுசுறுப்போடு பணியாற்றும் தொழில்முனைவோர்கள் வெற்றி பெற முடியும். சோம்பலின்றி உற்சாகத்தோடு உழைப்பவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

* உயர்ந்த சிந்தனைகளோடு கூடிய வளமான எண்ணங்கள் வெற்றிக்கு அவசியமாகும். எந்த அளவிற்கு உயர்ந்த சிந்தனை மனதில் விதைக்கிறோமோ அதற்கேற்பதான் அறுவடை செய்ய முடியும். பெரிய சாதனை படைத்தவர்கள் அனைவரிடத்திலும் உயர்ந்த எண்ணங்கள், சிந்தனைகள் அதை சார்ந்த செயல்பாடுகள் அமைந்திருக்கும். நல்ல வளமான எண்ணங்கள் சிந்தனைகளாகும். சிந்தனைகள் செயல்பாடுகளாக மாறும் செயல்பாடுகள் தான் நம் குணத்தை நிர்ணயிக்கும். எனவே, நல்லதையே சிந்தியுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »