தேவையான பொருட்கள்
முட்டை – ஒன்று
சர்க்கரை – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
ஏலக்காய் பொடி – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
நெய் – ஒரு தேக்கரண்டி
உடைத்த முந்திரி பருப்பு – 6
திராட்சை – 5
நேந்திரம் பழம் – 3
செய்முறை :
நேந்திரம் பழத்தை தோலோடு குக்கரில் போட்டு 2 கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசிலுக்கு வேக விடுங்கள். பின் ஆவி அடங்கியதும் எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். கட்டியில்லாது மசித்தால் சப்பாத்தி மாவு போல் வரும். பழம் நன்கு பழுத்தால் சரியாக வராது. மசித்த பழத்தை தனியே வையுங்கள்.
நெய்யை சூடாக்கி திராட்சை, முந்திரி போட்டு சிவந்ததும் முட்டை உடைத்து ஊற்றி சற்று கிளறியவுடன் தீயை அணைத்து விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வையுங்கள்.
பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மசித்த பழத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டவும்.
அதன் நடுவில் 1/2 தேக்கரண்டி பூரணத்தை வைத்து ஓரத்தை உள்ளிழுத்து மூடி கொழுக்கட்டை போல் மென்மையாக கையால் அழுத்தி ரக்பி பந்து (egg shape)ஷேப்புக்கு கொண்டு வரவும்
அதேபோல் மாவு அனைத்திலும் செய்யவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த வற்றை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான கேரளா உன்னக்காய் ரெடி.