தேவையான பொருட்கள்
மட்டை அரிசி அல்லது பச்சரிசி அல்லது சிகப்பு அரிசி – ஒரு டம்ளர்
பாசிப்பயறு – அரை டம்ளர்
சின்ன வெங்காயம் – 4
ப. மிளகாய் – மூன்று
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவியது – தேவைக்கு
செய்முறை
ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரஷர் குக்கரில் முதலில் அரிசி, பச்சை பயறை சேர்த்து நன்றாகக் கழுவி விட்டு பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், வெந்தயம், உப்பு சேர்த்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வைக்கவும்.
விசில் அடங்கியவுடன் கரண்டியின் பின் பகுதியை வைத்து நன்றாக மசித்து விடவும். பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதி விடவும்.
தண்ணியாக பிடிக்கும் என்றால் நிறைய தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவைக்கு ஏற்றவாறு துருவிய தேங்காயை அதனுடன் கலந்து பரிமாறலாம்.
கேரளாவில் இதனுடன் சுட்ட அப்பளம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
சுவையான மற்றும் சத்தான கஞ்சி தயார்.