தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
தேங்காய் – 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பொரிக்கடலை – 4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
பூண்டு – 5 பர்
இஞ்சி – சிறுதுண்டு
பட்டை – 1
ஏலக்காய் – 1
சீரகம் – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
கிராம்பு – 1
ஏலக்காய் – 1
உப்பு – தேவையான அளவு
பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை
ப.மிளகாய், சின்ன வெங்காயத்தை பொடியாகநறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
மிக்சியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் துருவலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அதனுடன் துருவிய துருவிய பீட்ரூட், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ளவும்
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு அடுப்பை மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்
சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் கோலா உருண்டை ரெடி.