மருந்தே இல்லாமல் அசத்தல்: கொரோனா பக்க விளைவில் இருந்து பாதுகாக்கும் எளிய வழிமுறைகள்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

அட, என்னப்பா இது…? எங்கதான் ஓடி ஒளியுறது? என்ன பண்றது…? மாப்பு… ஒண்ணுமே புரியலையே…! என்றுதான் கிட்டத்தட்ட எல்லோருமே புலம்புறாங்க!

கொரோனா வைரஸ் தாக்கி குணம் அடைந்தாலும் இனி பயமில்லை என்று இருக்க முடியாது. மீண்டும் சில நாட்கள் கழித்து வேறு விதமாக தனது வேலையை காட்ட தொடங்கி விடுகிறது. அதாவது கை, கால் மற்றும் மூளையின் ரத்த நாளங்களில் ரத்தத்தை உறைய வைத்து உறுப்புகளை செயல்படாமல் ஆக்கி விடுகிறது என்ற தகவல்தான் இப்போது உச்சகட்ட பீதியை உருவாக்கி உள்ளது.

பத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலேயே இந்த மாதிரி தாக்குதலுக்கு உள்ளாகி இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

உலக அளவில் ஏராளமானவர்கள் கை, காலகளை இழந்தும், பக்கவாதத்தால் கை, கால்கள் செயலிழந்தும் வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே வந்த கொரோனாதான் போய்விட்டதே என்ற மெத்தனம் கூடாது என்பதுதான் மருத்துவ நிபுணர்கள் சொல்வது.

ஆனால் நம் பாரம்பரிய வைத்திய முறையில் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் வழிகள் இருக்கிறது என்கிறார். அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி பேராசிரியை டாக்டர் தீபா!

இது பற்றி டாக்டர் தீபா கூறியதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு இந்த மாதிரி ரத்த நாளங்களில் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டிருப்பது உண்மைதான். அந்த மாதிரி ஒன்றிரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்காக கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்ட எல்லோரும் அச்சப்பட தேவையில்லை. நுரையீரல் அதிக அளவு பாதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் மீண்டவர்கள் மேலும் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உடையவர்கள் ஒரு சிலருக்குத்தான் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுகிறது.

உடலுக்குள் எவ்வளவோ வேதி மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் இரும்புசத்தை ரத்தத்தில் சீராக வைத்துக் கொள்வதும் ஒன்று. கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருப்பவர்களுக்கு இரும்புச் சத்து அதிகமாகி ரத்தத்தை உறைய வைக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் இது எல்லோரது உடலிலும் நிகழ்வதில்லை.

இந்த பிரச்சினையை யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் உணவு முறைகளால் வராமல் தவிர்க்க முடியும்.

உணவில் முடிந்தவரை அதிகமான நார்சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முளைகட்டிய பயிறு வகைகள், பசலைக்கீரை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது இரும்புசத்து அதிகமாவது தடுக்கப்படும்.

சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பசும்பால் மஞ்சள் பொடி போட்டு காய்ச்சி பருக வேண்டும். பாதாம், முந்திரி, வால்நட், அக்ரூட், உலர் திராட்சை போன்றவற்றை சாப்பிடலாம். பச்சை வேர்கடலை, ஊறவைத்த தேங்காய்பூ கலந்து சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தை தவிர்க்க வேண்டும்.

முக்கியமாக தினமும் மூச்சு பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

வாரம் ஒருமுறை ஜலநேத்தி செய்ய வேண்டும். இது மூக்கு, வாய், தொண்டை, வயிறு பகுதியை தூய்மை படுத்துவது.

அதாவது வெது வெதுப்பான தண்ணீரில் கல் உப்பு போட்டு ஒரு மூக்கினுள் விட்டு மறு மூக்கு வழியாக வெளியேற்ற வேண்டும்.

அதேபோல் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் மூக்கு, வாய், தொண்டை பகுதியில் படிந்திருக்கும் கோழை படிமத்தில் தங்கி இருக்கும் வைரஸ் வெளியேற்றப்படும்.

மேலும் வயிறு நிரம்ப அதேபோல் உப்பு கலந்த தண்ணீரை குடித்து வாந்தி எடுக்க வேண்டும். அப்போது வயிற்றுக்குள் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். அல்சர் பாதிப்பு இருப்பவர்கள் இதை செய்யக்கூடாது.

மஞ்சளில் இருக்கும் ‘குர்குமின்’ என்ற வேதி பொருள் ரத்தம் உறைவதை தடுக்கும். காலையில் நெல்லிக்காய் சாறு குடிப்பதும்,, மாலையில் அதிமதுரம், மஞ்சள், மிளகு, இஞ்சி கலந்த கசாயம் குடிப்பதும் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். இயற்கையான எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூளையை சீராக செயல்பட வைக்கும்.

இந்த மாதிரி உணவு கட்டுப்பாடுகளையும் சின்ன சின்ன யோகா பயிற்சிகளையும் ஓரிரு மாதங்கள் கடைபிடித்தால் கொரோனா தாக்கத்துக்கு பிறகு ஏற்படும் பிரச்சினைகளை நிச்சயமாக தவிர்க்க முடியும்.

Related Posts

Leave a Comment

Translate »