கண்களில் ஏற்படும் எரிச்சல், வலிக்கு நிரந்தர தீர்வு தரும் யோகாசனம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

யோகா என்பது பல கோணங்களில் உடலை சுருக்கி மனதையும் ஒருமுகப்படுத்தி செய்யும் பயிற்சி. இந்த பயிற்சியால் மனதையும் உடலையும் இணைத்து நீடித்த ஆரோக்கியத்தை பெறலாம். யோகாவை முறையாக பயிற்சி செய்தால் இரத்த அழுத்தம் சீராகும், மன அழுத்தம் குறையும், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புத் தன்மையை நீங்கும்.

அழகிய உடல் அமைப்பை பெறவும் ஆரோக்கியமாக இருக்கவும் சீரான எடையை பேணவும் யோக நமக்கு வழிகாட்டி வருகின்றது. மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்தும் யோகா மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளையும் சரிசெய்கின்றது.

வேலை பளு காரணமாக கண்களில் எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கான யோகா பயிற்சியை இப்போது பார்க்கலாம்.

நிமிர்ந்து நேராக உட்கார வேண்டும். வலது கையில் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களை மடக்கி, பார்வைக்கு நேராக உயர்த்தி, கட்டைவிரலைப் பார்க்க வேண்டும். நம் பார்வை, கட்டை விரலில் நிலைத்திருக்க வேண்டும். கையை மெதுவாக வலப்புறம் நகர்த்த வேண்டும்.

கையை நகர்த்தும்போது, விழிகள் மட்டும் கையோடு சேர்ந்து நகர வேண்டும். தலையைத் திருப்பக் கூடாது. கழுத்து, முதுகு, நேராக இருப்பது அவசியம். கட்டை விரலைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய தூரம் வரை மட்டுமே கையை நகர்த்தவும். சிறிது நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு, கையை அப்படியே பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதை, ஐந்து முறை செய்ய வேண்டும். பயிற்சி செய்யும்போது, கண்களைச் சிமிட்டக் கூடாது. இதேபோல கை பெருவிரலை இடது பக்கம் நகர்த்தி செய்ய வேண்டும்.

நேராக உட்கார்ந்து, மூக்கின் நுனியை உற்று நோக்கவும். கண்களோ, தலையோ வலிப்பது போன்று இருந்தால், கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டுத் தொடரலாம். பிறகு, கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.

நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை 10 முதல் 20 முறை சிமிட்டவும். பிறகு, கண்களைத் திறந்து நேராகப் பார்க்கவும். இடது கண் விழியை வலது பக்கமும், வலது கண் விழியை இடது பக்கமும் கொண்டுவந்து பயிற்சி செய்யவும். அதன் பிறகு, கைகளை தேய்த்து கண்களில் வைத்துக்கொள்ளவும். மீண்டும் 10- 20 முறை கண்களைச் சிமிட்டவும்.

கழுத்தில் ஏற்படும் வலியினைக் களைய, ஏழு எளிய ஆசனங்களை உங்களுக்குத் தருகின்றோம். அவை செய்வதற்கு சுலபமானவை. உங்களது நேரத்தையும் அதிகம் எடுத்துக் கொள்ளாது.

1. பாலாசனா சிசு நிலை: (i) தரையில் மண்டியிட்டு அமர்ந்து கொள்ளவும். முழங்காலுக்குக் கீழும், கணுக் காலுக்கு மேலும் உள்ள காலின் முன் பகுதி தரையில் இருக்கட்டும். கால் கட்டை விரல்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு இருக்கட்டும்.குதி கால்களின் மீது அமருங்கள்.

கைகள் இரண்டும் பக்க வாட்டிலேயே இருக்கட்டும். மூச்சினை வெளியே விட்டு, தலை நீக்கிய மீதம் உள்ள உடற் பகுதியை உங்கள் தொடைகளுக்கிடையே மெதுவாகக் கொண்டு வாருங்கள். உங்கள் தலை மெதுவாகத் தரையைத் தொடட்டும். உங்கள் கைகள் இரண்டும் பக்க வாட்டில், உள்ளங்கைகள் வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும். இந்த நிலையில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நிலைத்திருங்கள்.மூச்சினை உள்ளே இழுத்து, மீண்டும் அமர்ந்த நிலைக்கு வாருங்கள்.

(ii) உங்கள் கைகள் இரண்டினையும் தொடைகளின் மீது வைத்து, முழந்தாளிட்டே அமர்ந் திருங்கள். இந்தத் தோற்றம், கழுத்து வலியினை போக்குவது மட்டுமல்லாது உங்களது மூளையையும் அமைதிப் படுத்துகின்றது.இடுப்பு, தொடைகள், கணுக் கால்கள், ஆகியவற்றை நீட்டி, உங்களைக் குழந்தையைப் போன்று புத்துணர்ச்சியுடன் இருக்க வைக்கின்றது.

Related Posts

Leave a Comment

Translate »