கூந்தலுக்கு அழகு, ஆரோக்கியம் தரும் ரோஜா

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

ரோஜா மலர்கள் கூந்தலை அலங்கரித்து அழகை ஆராதிப்பதோடு அல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ரோஜாவின் அழகும், மணமும் மனதிற்கு உற்சாகம் தரும். நோய் தொற்றுக்களில் இருந்தும் பாதுகாக்கும். மலச்சிக்கல், கருவளையம், மாதவிடாய் போன்ற பிரச்சினைகளை சமாளிக்கவும் உதவும். சிவப்பு ரோஜா இதழ்களில் உள்ளடங்கி இருக்கும் ஐந்து ஆரோக்கிய நன்மைகள்:

ரோஜா இதழ்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினையை தவிர்க்கலாம். ரோஜா இதழ்கள் சிலவற்றை ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். இரவு தூங்க செல்லும்போது அதனை பாலுடன் கலந்து பருகவும். காலையில் எழும்போது வயிறு இதமாக இருக்கும். தொடர்ந்து சில நாட்கள் ரோஜா இதழ்கள் கலந்த பால் பருகிவந்தால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.

சிலர் சிறுநீர் பாதையில் நோய் தொற்று பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுவார்கள். ரோஜா இதழ்கள், பாக்டீரியா நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. யோனி அல்லது சிறுநீர் பாதையில் படிந்திருக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி நோய் தொற்று பரவாமல் குணப்படுத்த உதவும். ரோஜா இதழ்களை கொதிக்கும் நீரில் வேகவைத்து வடிகட்டி பருகலாம்.

சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது. சில சமயங்களில் முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ மாதவிடாய் சுழற்சி இருந்து கொண்டிருக்கும். மாதவிடாய் செயல்முறையை சீராக்கி இயல்பு நிலையை தக்கவைப்பதற்கு ரோஜா இதழ்கள் துணைபுரியும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் ரோஜா இதழ்கள் சிலவற்றை சாப்பிட்டு வந்தால் போதும்.

கண்களுக்குக் கீழே தோன்றும் கருவளையங்களால் அவதிப்படுபவர்களுக்கும் ரோஜா இதழ்கள் நன்மை பயக்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி சிறந்த ஆக்சிஜனேற்றியை போல் செயல்படக்கூடியது. கண்களில் படர்ந்திருக்கும் கருவளையங்களை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றும். ரோஜா இதழ்களை நன்றாக அரைத்து பசைபோல் குழப்பி கருவளையங்கள் மீது தடவி அரைமணி நேரம் உலர வைத்துவிட்டு கழுவலாம். ரோஜா இதழ்களை அரைத்து பாலில் கலந்து முகத்திலும் தடவலாம். சருமம் பளிச்சிடும்.

ரோஜா இதழ்களை உட்கொள்வதன் மூலம் சளி, இருமல் போன்ற பருவகால நோய் தொற்றுகளை தவிர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்றாக கழுவி தினமும் சாப்பிடலாம். மில்க் ஷேக்கில் கலந்தும் பருகலாம்.

Related Posts

Leave a Comment

Translate »