பசியைத் தூண்டும் வேப்பம்பூ பருப்பு ரசம்

by admin

தேவையான பொருட்கள் :  
வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி, துவரம் பருப்பு – தலா 100 கிராம், கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:  
துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். 
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். 
மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும். 
இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்கவிடவும். 
வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும். 
பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும். 
கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும். 
சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »