15 நிமிடத்தில் செய்யலாம் சாக்லேட் மோதகம்

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

டார்க் சாக்லேட்- ¾ கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – ½ கப்,
கன்டென்ஸ்டு மில்க் – ½ கப்,
நறுக்கப்பட்ட பிஸ்கெட் துண்டுகள் – 2 கப்,
நறுக்கப்பட்ட பாதாம், பிஸ்தா, முந்திரி, வால்நட் – ¼ கப்,
நெய் – சிறிதளவு.

சாக்லேட் மோதகம்

செய்முறை:

அகலமான நான் ஸ்டிக் வாணலியில் ஃப்ரெஷ் க்ரீம், கன்டென்ஸ்டு மில்க் மற்றும் டார்க் சாக்லேட்டை ஒன்றாகப் போட்டு கலக்கவும்.

அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்துள்ள இவற்றைக் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

இரண்டு நிமிடங்களுக்குப்பிறகு ஒரு கெட்டியான பேஸ்ட் போன்ற பதத்திற்கு வந்தவுடன் நறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் முந்திரி, பாதாம் போன்றவற்றையும் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கிளற வேண்டும்.

இந்தக் கலவை மேலும் கெட்டியாகி மாவுப்பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை நிறுத்திவிட்டு வேறொரு தட்டில் இந்தக் கலவையை மாற்றி முற்றிலுமாக ஆறவைக்க வேண்டும்.

ஆறிய பின் மோதக அச்சில் நெய் தடவி இந்த கலவையை கெட்டியாக அடைத்து பின்பு அதிகப்படியாக இருக்கும் மாவை எடுத்தோமானால் அழகான, சுவையான சாக்லேட் மோதகங்கள் தயார்.

இந்த மோதகத்தைச் செய்வதற்கு பதினைந்து நிமிடங்களே போதுமானதாகும்.

குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் இந்த மோதகங்களை காற்றுப்புகாத டப்பாக்களில் வைத்து ஒருவாரம் வரையிலும் பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment

Translate »