தேவையான பொருட்கள் :
சோள மாவு – அரை கப்
உளுந்து மாவு – கால் கப்
தூளாக்கிய வெல்லம் – கால் கப்
பேரிச்சம்பழம் – 6 (சிறிதாக நறுக்கவும்)
சமையல் சோடா – சிறிதளவு
ஏலக்காய் – கால் தூள் டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சோளமாவை போட்டு அதனுடன் உளுந்துமாவையும் ஒன்றாக சேருங்கள்.
பேரீச்சம்பழத்தையும் கலந்திடுங்கள்.
அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தை கொட்டி தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.
அதனுடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளவும்.
பின்பு உளுந்து – சோள மாவு – பேரீச்சம் பழம் கலந்த கலவையும் வெல்ல கரைசலுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.
அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள்.
பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டெடுக்கவும்.
சூப்பரான சோளப் பணியாரம் ரெடி.
Visits: