தேவையான பொருட்கள் :
அவகேடோ பழம் – 3
தேன் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
குளிர்ந்த பால் – 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் – 3

செய்முறை:
அவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.
அடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன் அல்லது நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
டேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி.
இது உடலுக்கு ஆரோக்கியமும் தரும். அதேநேரத்தில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்கவும் செய்யும்.