எந்தெந்த உடற்பயிற்சிகள் எவ்வளவு கலோரிகளை எரிக்கும் தெரியுமா?

by admin

எல்லாரும் வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு இந்த 6 உடற்பயிற்சிகள் கை கொடுக்கும் என்கிறார்கள் உடற்பயிற்சி நிபுணர்கள். இந்த 6 உடற்பயிற்சி நிலைகளும் உங்க உடல் எடையை குறைக்க உதவுவதோடு உங்க தசைகளை வலுவாக்கவும் மேம்படுத்தவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தாலே உடற்பயிற்சி தான் நம் கண்களுக்கு தென்படும். ஏனெனில் உடற்பயிற்சியின் மூலம் நம் உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க முடியும்.

வாக்கிங்

சிலருக்கு வாக்கிங் சென்றாலே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். ஆனால் சிலருக்கோ வாக்கிங் ஜாக்கிங் என்று என்ன செய்தாலும் உடல் எடை குறையாது. எனவே உங்க உடல் எடையை குறைக்க உங்களுக்கு என்று சிறந்த உடற்பயிற்சியை தேர்ந்தெடுப்பது அவசியம் ஆகிறது. அதனால் தான் நாங்கள் உங்களுக்கான சிறந்த உடற்பயிற்சி முறைகளை இங்கே பட்டியல் இடுகிறோம்.

பர்பீஸ் உடற்பயிற்சி

இது ஒரு மேஜிக் என்றே கூறலாம். எந்த நேரத்திலும் உங்க எடை இழப்பு முடிவுகளை சிறப்பாக காண்பிக்க இந்த பர்பீஸ் உடற்பயிற்சி உதவுகிறது. ஒரு வேளை நீங்கள் ஒரு பெரிய எடை இழப்பை பெற விரும்பினால் ஒரு நாளில் குறைந்தது 50-100 பர்பீக்கள் வரை செய்ய முற்படுங்கள்.

தவளை ஜம்ப்

நாம் குழந்தை பருவத்தில் விளையாட்டாக செய்த நிறைய விஷயங்கள் இன்று நம் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. கண்டிப்பாக இது உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால் தவளை போன்று குதித்து குதித்து உடற்பயிற்சி செய்வது உங்க உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை எரிக்க உதவுகிறது. முன்னோக்கி தாவல்கள் மற்றும் குந்துகளின் வீச்சு போன்றவை இந்த பயிற்சியில் உள்ளது. இந்த தவளை தாவல்களை 20 தடவை என 4 முறை செய்து வரலாம். இதன் மூலம் உடல் எடையை குறைக்க உங்களுக்கு ஒரு மாதம் காலம் ஆகலாம்.

குதிக்கும் குந்துகை பயிற்சி

உங்க உடலின் மையத்திலிருந்து கால் வரை உடலின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கொழுப்புப் பைகளைத் துடைக்க குதிக்கும் குந்துகைகள் உடற்பயிற்சி உதவுகிறது. இது கார்டியோ மற்றும் பாடிவெயிட் பயிற்சியின் கலவை. இது உங்க உடலுக்கு இரட்டை நன்மைகளைக் தருகிறது. இது உங்க இதய செயல்பாட்டை சீராக்க இந்த குந்துகை உடற்பயிற்சி உதவுகிறது. 25 ஜம்பிங் குந்துகையாக 4 தடவை செய்யுங்கள்.

ஸ்பிரிண்ட்

ஜாகிங் மற்றும் பல மணி நேரத்திற்கு ஓடுவது கூட கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் 200 மீட்டர் ஜாகிங் கை விட 10 தடவை ஸ்பிரிண்ட் செய்வது கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. இது எடை இழப்பிற்கான சிறந்த ஒன்றாகும். த்ரெட்மில்லில் ஓடுவது உங்க உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது. 10 தடவை செய்யுங்கள். ஸ்பிரிண்ட்கள் உங்க உடல் கொழுப்பை குறைக்கிறது.

கெட்டில்பெல் ஸ்விங்

உடல் எடையை குறைக்க பலரும் நம்புவது இந்த கெட்டில்பெல் ஸ்விங் தான். இது தசைகளில் ஏற்படும் காயங்கள் மற்றும் தசை கிழிவதை குறைக்கிறது. கெட்டடில் பெல் இயல்பான எடை பராமரிக்க உதவுகிறது. 4-6 கிலோ ஆனது கெட்டில்பெல் செய்வதற்கு போதுமானது.

ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டுதல்

நம் உடல் எடையை கட்டுக்குள் வைக்க ஸ்கிப்பிங் என்பதுசிறந்த முறையாகும். குறைந்தது 1000 முதல் 1500 ஸ்கிப்களை செய்ய வேண்டும். எனவே நீங்கள் எடையை இழக்க 200 ஸ்கிப்பிங் வரை என ஆரம்பியுங்கள். 7 செட்களை செய்யலாம்

எனவே இனி உங்களுக்கு எடை இழப்பு என்று வந்தாலே இந்த உடற்பயிற்சிகளை பேணுங்கள். இதன் மூலம் உங்க உடல் எடையை குறைக்க வாய்ப்பு உள்ளது.

Visits:

Related Posts

Leave a Comment

Translate »