இரு கைகளையும் கால்களையும் நேராக நீட்டி ஜெட் விமானம் போல இருக்கும் நிலையே விபரீத சலபாசனம். சலபாசனம் என்றால் வெட்டுக்கிளி போன்ற தோற்றத்தில் காணப்படுவது விபரீத சலபாசனம் ஆகும்.
செய்முறை
முதலில் கால்களை மடக்கி, வஜ்ராசன நிலையில் அமரவும். அப்படியே முன்பக்கமாகக் குனிந்து, பிறகு ஒவ்வொரு காலாக நீட்டி, குப்புறப் படுக்கவும். கை மற்றும் கால்கள், உடலோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும். பின்னர் இரு கைகளையும் முன் நோக்கி நீட்டி, சற்று மேலே தூக்கவும்.
பிறகு, இரு கால்களையும் சேர்த்து, மெதுவாக மேலே தூக்கவும். பறக்கும் நிலை இதுதான். இதே நிலையில், 10 எண்ணிக்கை வரை இருக்கவும். சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் 10 எண்ணிக்கை என ஐந்து முறை செய்யவும்.
பயன்கள்
கல்லீரல், மண்ணீரல் வலுப்பெறும். பகல் தூக்கத்தைத் தடுக்க நல்ல ஆசனம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான அளவில் இருக்க உதவி செய்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.