bengali-saree_புகழ்பெற்ற பெங்காலி சேலைகள்...

புகழ்பெற்ற பெங்காலி சேலைகள்…

by admin


உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தென்னிந்தியர்களை போலவே சேலைகள் அணிவதில் அதிக ஆர்வமுடையவர்கள் பெங்காலி பெண்கள் என்று சொல்லலாம். பொதுவாக பெங்காலி புடவைகள், பெங்காலி காட்டன் என்று மட்டுமே அந்தப் புடவைகளை அறிந்திருக்கும் நாம் அவற்றில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாமா?

பெங்காலி புடவைகள் என்பது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் கிடைக்கின்றன. பெங்காலி காட்டன் சேலைகள் அணிவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமாகவும் அழகான தோற்றத்தை தருவதாகவும் உள்ளன.

சிறப்பம்சங்கள்:

* பலுச்சாரி பெங்காலி புடவைகள் ஐந்து ஜெக நீளம் மற்றும் நாற்பத்திரண்டு அங்குல அகலத்துடன் நெய்யப்படுபவையாகும்.

* தாந்த் பெங்காலி சேலைகள் ஆறு ஜெக நீளம் கொண்டவையாகும்.

பெரும்பாலான பெங்காலி புடவைகள் சிவப்பு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களிலேயே நெய்யப்படுகின்றன.இவ்வகை சேலைகள் மிகவும் எடைகுறைவாகவும் அதிக வெப்பம் மற்றும் குளிர் காலங்களில் கூட அணிந்து கொள்ளக்கூடியவையாகவும் இருக்கின்றன.

பெங்காலி பெண்கள் சேலைகளை கட்டும் விதத்திற்காகவே இவை சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

பயன்படுத்தப்படும் துணிகள்:

பெங்காலி புடவைகளில் பல விதமான துணிகளைப்பயன்படுத்துகிறார்கள். அதில் பருத்தி முதன்மையாக உள்ளது. முர்ஷிதாபாத் பட்டு, டஸ்ஸர் பட்டு, மட்கா பட்டு, முல் காட்டன், பருத்தி பட்டு, மல்பெரி பட்டு மற்றும் மெல்லிய மஸ்லின் துணிகளை கொண்டு புடவைகளை நெசவு செய்கிறார்கள்.

தாந்த் சேலைகள்: பெங்காலி காட்டன் புடவைகளில் பிரபலமான ஒரு வகை என்று இதை சொல்லலாம். இவை மிகவும் லேசாகவும், எடை குறைவாகவும் உட்புறம் நுட்பமான நூல் டிசைன்களுடனும் பல்லு மற்றும் பார்டரில் அலங்கரிக்கப்பட்ட வடிவமைப்புகளுடனும் வருகின்றன. அலுவலகங்கள் மற்றும் சாதாரண நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றவை.

டஸ்ஸர் பட்டு: பெரிய ஜவுளிக்கடைகளில் இதற்கென்று ஒரு தனிப்பிரிவே இருப்பதை பார்க்க முடியும். மிகப்பிரசித்தி பெற்ற பெங்காலி சேலைகளில் இதுவும் ஒன்றாகும். அணிந்தால் கம்பீரமான தோற்றத்தை தரும் இச்சேலைகளின் செழுமையை அதன் நெசவிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். அனைத்து உடல்வாகு உடையவர்களும் இந்த டஸ்ஸர் பட்டு சேலைகளை திருவிழாக்கள் மற்றும் பாரம் பரிய விழாக்களுக்கு அணியலாம்.

பெங்காலி பட்டுப்புடவைகளில் புகழ்பெற்றவை என்று பலுச்சாரி புடவைகளை சொல்லாம். இந்த சேலைகளின் பல்லுவில் இந்திய கலாச்சாரத்தின் புராணக்காட்சிகள் அழகாக சித்தரிக்கப்படுகின்றன. நெய்த நெசவாளர்களின் திறமையை வெளிப்படுத்தும் மிகச்சிறந்த நெசவு சேலைகளில் இதுவும் ஒன்று.

இந்த சேலைகளின் வேலைப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் தங்கநிற நூல்கள் சேலைகளுக்கு மேலும் அழகை கூட்டுகின்றன. திருமணம் மற்றும் ஆடம்பரமான நிகழ்ச்சிகளுக்கு அணிந்து செல்லக்கூடிய பட்டுப்புடவைகள் இவை.

முர்ஷிதாபாத் பட்டு: அழகான தூய கலை வேலைப்பாட்டை வெளிப்படுத்துபவை இந்த சேலைகள் பல்லு மற்றும் பார்டரில் கைகளால் தீட்டப்பட்ட ஓவியங்களுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரவு நேர விருந்து நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றவை.

காந்தா சேலைகள்: இந்தப்புடவைகள் அவற்றில் செய்யப்பட்டிருக்கும் சிக்கலான மற்றும் விரிவான நூல் வேலைக்கு பிரபலமானவை. வொர்லி பாணி மட்டுமல்லாது எந்த ஒரு பாணியையும் காந்தா வேலைகளால் சேலைகளில் அழகாக உருவாக்குகிறார்கள். பட்டுச்சேலைகளில் காந்தா வேலைப்பாடுகளானது அழகிற்கு அழகு சேர்க்கின்றன.

ஷாந்திபுரி காட்டன் சேலைகள்: இவை எளிமையாகவும் நேர்த்தியாகவும் இருக்கின்றன. மிகக்கடுமையான கோடைக்காலத்தில் அணிவதற்கு ஏற்ற மென்மையான வசதியான சேலைகள் இவை. இந்த சேலையின் மற்றொரு சிறப்பம்சம் நீளமான புட்டா போன்ற டிசைன்களை பல்லுவில் அதிகமாக வருவதாகும். தினப்படி உடுத்துவதற்கு ஏற்றவை.

பேகம்பூர் சேலைகள்: உடல் முழுவதும் அடர்த்தியான ஒரே வண்ணம், பார்டர் மற்றும் பல்லுவானது மற்றொரு கான்ட்ராஸ்ட் வண்ணத்தில் ஜியாமெட்ரிகள் டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இவ்வகை காட்டன் சேலைகள் அலுவலகத்திற்கு அணிந்து செல்ல ஏற்றவை.

பத்திக் சேலைகள்: பெங்காலி சேலைகளில் அதில் இடம் பெற்றிருக்கும் டிசைனுக்காகவே பிரபலமானவை இவ்வகை சேலைகள்.

மட்கா பட்டு சேலைகள்: அலுவலக விருந்துகளுக்கும், பெரிய கவுரவமான விருந்துகளுக்கும் அணிந்து செல்ல ஏற்றவை.

பாரம்பரிய பட்டு சேலைகள் : பிளெயின் வெள்ளை நிறத்தில் பட்டையான சிவப்பு பார்டர் மற்றும் சிவப்பு கோடுகளால் ஆன பல்லு இவை பெங்காலிகளின் பாரம்பரியச் சேலையாகும்.

இவைமட்டுமல்லாது லினென் காட்டன் சேலைகள், பட்டில் ப்ரோகேட் வேலைப்பாட்டுடன் வரும் சேலைகள், பெங்கால் பட்டு, பெங்காலி காட்டன் சில்க் சேலைகள், தங்கைல் சேலைகள், புலியா கைநெசவு சேலைகள், கரோட் சேலைகள், கொரியல் சேலை கள், தனியாகாலி காட்டன் சேலைகள் என ஒவ்வொன்றும் தனக்கெனத் தனிச்சிறப்பைக் கொண்டிருப்பதோடு பெங்காலி நெசவாளர்களின், திறமையையும் பறைசாற்றுகின்றன.

Related Posts

Leave a Comment

Translate »