seventh-month-of-pregnancy

ஏழாம் மாதம்: தாயின் குரலுக்கு குழந்தை கட்டுப்படும்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

இந்த மாதத்தில் சோர்வு, முதுகுவலி, படுத்து தூங்குவதில் நெருக்கடி போன்றவை தோன்றும்.

உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தடவை குழந்தையின் அசைவை உணர முடியும். அடிவயிறு இப்போது கால்பந்து அளவில் காணப்படும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உருவாகும்.

26-வது வாரம் குழந்தையின் முக்கியமான வளர்ச்சிக்கட்டம். அப்போது குழந்தையின் நீளம் 37 செ.மீட்டராக அதிகரித்து, எடை ஒன்று முதல் ஒன்றரை கிலோ ஆகிவிடும்.

தூக்கமின்மை தோன்றும். அதனால் கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துக்கொண்டு படுக்க முயற்சிக்க வேண்டும்.

ஏழாம் மாதத்தில் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும். நஞ்சுக்கொடி கர்ப்பப் பைக்கு கீழ் வந்தாலும் பிளடிங் தோன்றும். பிரசவ வலி தோன்றவும், குறைப்பிரசவம் உருவாகவும் அது காரணமாகிவிடும். அதனால் மிகுந்த கவனம் தேவை.

இந்த மாதத்தில் இருந்து கர்ப்பிணிகளுக்கு பிரசவத்தை பற்றிய பயம், கவலை, சந்தேகங்கள் நிறைய எழும். கவலை, பயத்தை போக்கி மனதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

கர்ப்பிணியை சுற்றி இருப்பவர்கள் சரியான தகவல்களையும், நம்பிக்கையையும் கொடுத்து, மனஉளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

தும்மும்போதும், இருமும் போதும் சிறுநீர் கசியும் சூழ்நிலை ஏற்படலாம்.

முதுகுவலியும், கால் மரத்துப்போகும் நிலை யும் அவ்வப்போது ஏற்பட்டு கர்ப்பிணியை கவலைப்படுத்தும்.

உடலில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும். அதனால் உடலில் அதிகமாக வியர்க்கும். அதை பற்றி கவலைப்படவேண்டியதில்லை.

இந்த மாதத்தில் குழந்தையின் சலனம் அதிகரித்து அவ்வப்போது தாயின் தூக்கத்தைக்கெடுக்கும்.

இந்த காலகட்டத்தில் பெண்கள் பிரசவத்தை எளிதாக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பிரசவத்தை எளிமையாக்கவும், பிரசவத்திற்கு பிறகு உறுப்பை இறுக்கமாக்கும் நிலையை ஏற்படுத்தவும் ‘கீகல்ஸ்’ பயிற்சி சிறந்தது. உறுப்பு பகுதி இயக்கத்தை கட்டுப்படுத்துவதும், இயல்பாக்குவதும் இந்த பயிற்சி நிலையாகும். தினமும் 25 தடவை, 8 வினாடிகள் வரை உறுப்பை இறுக்கமாக்கி பின்பு தளர்த்தவேண்டும். இந்த பயிற்சியை பற்றி மகப்பேறு நிபுணரிடம் கேட்டு, முறைப்படி பின்பற்றுவது நல்லது.

தேவைப்பட்டால் மட்டும் இந்த மாதம் ஸ்கேனிங் செய்தால் போதுமானது. மாதாந்திர பரிசோதனையை முறைப்படி தொடரவேண்டும். நெகட்டிவ் ரத்த வகையை கொண்ட கர்ப்பிணிகள் 7-ம் மாதத்திற்கும், 8-ம் மாதத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி அதற்குரிய ஊசி மருந்துகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

முந்தைய மாதங்களை போன்று இப்போதும் சமச்சீரான சத்துணவுகளை உட்கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நல்லது. அது குழந்தையின் வளர்ச்சிக்கும், தாயின் இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தேவை. பிராக்கோலி, ஆரஞ்சு, குடைமிளகாய், முட்டைக்கோஸ், ஸ்ட்ராபெர்ரி போன்றவைகளை சாப்பிடுவது நல்லது.

கர்ப்பப்பை பெரிதாகிவிடுவதால் தாய்க்கு சுவாசிப்பதில் நெருக்கடியும், நெஞ்சு எரிச்சலும் தோன்றும். மார்பகங்களில் இருந்து கொலஸ்ட்ரம் என்ற பால் வெளிப்படலாம். குழந்தையின் வளர்ச்சி வேகமெடுக்கும் மாதம் இது. அதன் சுவாச கட்டமைப்புகளும், ஈரலும் நன்றாக செயல்படத் தொடங்கும். தாயின் குரலை குழந்தையால் அடையாளங்கண்டுவிட முடியும். சில தருணங்களில் தாயின் குரலுக்கு கட்டுப்படவும் செய்யும்.

Related Posts

Leave a Comment

Translate »