தேவையான பொருட்கள்:
பால் – 1 தேக்கரண்டி
பாதாம் பிசின் – 2 தேக்கரண்டி
கடல் பாசி / பாலாடை – தேவையான அளவு
சர்பத் – 4 தேக்கரண்டி
சர்க்கரை – தேவையான அளவு
ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப்
ஐஸ்கட்டி – தேவையான அளவு
செய்முறை
பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.
பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும்.
பாதாம் பிசினை கழுவி முதல் நாள் இரவே அது முழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
ஒரு கண்ணாடி தம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்ற வேண்டும்.
அதன் பிறகு, ஊறி இருக்கும் பாதாம் பிசினை அதில் ஒரு தேக்கரண்டி விட வேண்டும்.
அதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும்.
அதன்மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!