தேவையான பொருட்கள் :
பேபி கார்ன் – 10 கதிர்கள்
சாட் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா தூள் – அரை டீஸ்பூன்
தயிர் -கால் கப்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன்
சமையல் சோடா – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பேபி கார்னை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, சோள மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சமையல் சோடா, எலுமிச்சை சாறு போன்றவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும்
இந்த கலவைக்குள் பேபி கார்னை புரட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித் தெடுக்கவும்.
அதன் மீது சாட் மசாலாவை தூவி ருசிக்கலாம்.
சூப்பரான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் – 65 ரெடி.