thenai-pesarattu_ஆரோக்கியம் நிறைந்த தினை பாசிப்பருப்பு பெசரெட்

ஆரோக்கியம் நிறைந்த தினை பாசிப்பருப்பு பெசரெட்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – ஒரு கப்,
தினை அரிசி – முக்கால் கப்,
சின்ன வெங்காயம் – 10,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

சின்னவெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும்.

மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இதனுடன் உப்பு சேர்த்துக் கரைக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி,  அரைத்து வைத்த மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுத்தால்… சத்தான தினை பெசரட் தயார்!

Visits:

Related Posts

Leave a Comment

Translate »