தேவையான பொருள்கள் :
காளான் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 150
தக்காளி – 2
தேங்காய் – 1/2 மூடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மல்லிதூள், மிளகாய்தூள் – தலா 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
சோம்பு – கால் ஸ்பூன்
கசகசா – கால் ஸ்பூன்
பட்டை இலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு,எண்ணை – தேவைக்கேற்ப
செய்முறை :
காளான்களைக் கழுவிச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி ஆகியவற்றையும் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, கசாகசா-சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம் முன்றையும் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை போட்டுதாளித்த பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி நன்கு குழை வதங்கியதும் அரைத்த பட்டை கசாகசா சேர்த்து நன்க வதக்கி அதனுடன் மசாலா தூள்களையும் போட்டு வதக்கி காளான் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த தேங்காய் சேர்த்து குக்கரில் 2 விசில் போட்டு இறக்கி கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
சூப்பரான காளான் குருமா ரெடி.