தேவையானவை பொருட்கள்
அவல் – 200 கிராம்,
அரிசி – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
கடுகு, இஞ்சி துருவல் – சிறிது,
மிளகாய் – 1.
செய்முறை
ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும்.
தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.
சூடான அவல் தோசையுடன் காரமான கெட்டிச்சட்னியை வைத்து சாப்பிட சுவை நன்றாக இருக்கும்.