back-bite-friends_கைவரிசையைக்காட்டும் கலகத் தோழிகள்

கைவரிசையைக்காட்டும் கலகத் தோழிகள்

by admin










உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

நீங்கள் உங்கள் தோழிகளிடம் நல்லமுறையில் பழகுங்கள். அவர்களுக்கு நல்லதை மட்டுமே செய்யுங்கள். அவ்வாறு நல்ல எண்ணங்களோடு நீங்கள் பழகினால், அவர்களுக்கு மட்டுமல்ல பழகும் உங்களுக்கும் மனநலமும், உடல் நலமும் மேம்படும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது, ‘நல்ல எண்ணங்களோடு நீங்கள் அடுத்தவர்களிடம் பழகினால் உங்கள் மனம் மகிழும். அதன் மூலம் உங்கள் ஆயுள் பெருகும். அமைதியாக தூங்குவீர்கள். மனஇறுக்கமின்றி நிம்மதியாக வாழ்வீர்கள். தோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள்’ என்று விளக்குகிறது, அந்த ஆய்வு.

நீங்கள் உங்கள் தோழிகளுக்கு கெடுதல் செய்யக்கூடாது என்று கூறும் அந்த உளவியல் ஆய்வு, உங்களுக்கு கெடுதல் செய்ய நினைக்கும் தோழி களை எப்படி அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

ஒரு சிலரை நீங்கள் நெருக்கமான தோழிகள் பட்டியலில் வைத்திருப்பீர்கள். படிப்பிலோ, வேலை யிலோ, பதவியிலோ அவர்களுடன் போட்டிபோடும் சூழ்நிலை உருவாகும்போதுதான் அவர்களது உண்மையான குணாதிசயம் என்னவென்று உங்களுக்கு தெரியவரும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பது கிடைக்காமல் போயிருக்கும். அதன் பின்னணியை ஆராய்ந்தால், அதற்கு உங்களுக்கு நெருக்கமான தோழிகளேகூட காரணமாக இருப்பது தெரியவரும்.

அப்படிப்பட்ட மோசமான தோழிகளை நீங்கள் அடையாளம் காண்பது எளிது. அவர்கள் உங்கள் மீது அதிக அக்கறைகொண் டவர் போன்று காட்டிக்கொண்டு, உங்களை பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக உங்களது அந் தரங்க பக்கங்கள், ரகசிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவை உருவாக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் இருந்து விலகி விடவேண்டும்.

சில தோழிகள் அதிக உரிமை எடுத்து உங்களிடம் பழகுவதோடு, திட்டமிட்டு உங்களை தவறான வழிகளிலும் ஈடுபடுத்த முயற்சி செய்வார்கள். அவர்களிடம் சிக்கிக்கொண்டால் உங்கள் கவுரவமும், உடல் நலமும் பாதிக்கப்படும். உங்களுக்கு யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களால்தான், தேவையில்லாத பழக்கவழக்கங்களில் உங்களை ஈடுபடுத்த முடியும். மது, புகை, தவறான நட்பு போன்றவைகளை அறிமுகப்படுத்தும் தோழிகளி டமும், அவை தப்பில்லை என்று வாதிடும் தோழிகளிடமும் கவனமாக இருங்கள்.

சமூகம் புறக்கணிக்கும் தவறான விஷயங்களை, தவறல்ல என்று கூறிக்கொண்டு அதை அனுபவிக்க வலியுறுத்தும் நட்பு வட்டாரத்திடம் ஜாக்கிரதையாக இருக்க வேண் டும். இன்பம் என்ற பொறியை வைத்து உங்களை வசீகரித்து, உங்கள் வாழ்க்கையை சீரழிக்க நினைக்கும் தோழிகளிடம் ஒருபோதும் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

தோழிகளில் சிலர் புகழ்ந்து பேசியே குழிபறிக்கும் வேலையிலும் ஈடுபடுவார்கள். அவர்கள், தனது தகுதிக்கு ஏற்ற வேலையை செய்துகொண்டிருப்பவர்களிடம் ‘உன் திறமைக்கு இதைவிட நல்ல வேலை கிடைக்கும். இதை உதறித்தள்ளு.. வேறு வேலை நான் வாங்கித்தருகிறேன்’ என்று கூறி, வேலையை இழக்கவைத்து நடுரோட்டிற்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டு காணாமல் போய்விடுவார்கள். இப்படி வேலைக்கு வேட்டு வைப்பது மட்டுமல்ல, அந்த தோழிகள் காதலுக்குள் புகுந்து ‘உன் காதலன் மோசமானவன். அவனை கழற்றிவிட்டுவிடு’ என்று பேசி, குழப்பி, அந்த காதலுக்கே சமாதி கட்டிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான தோழிகளை தவிர்ப்பது சற்று கடினம்தான். ஏன்என்றால் நீங்கள், முக்கியமான விஷயங்களில் ஆலோசனை கேட்கும் அந்தஸ்தை அவர்களுக்கு ஏற்கனவே வழங்கியிருப்பீர்கள். எப்படி பேசினால் உங்களை நம்பவைக்க முடியும் என்ற அனுபவமும் அவர்களுக்கு இருக்கும். உங்கள் வளர்ச்சி பிடிக்காத இவர்கள் நீங்கள் எழுச்சி பெறும்போதெல்லாம், முரண்பாடான ஆலோசனைகளை கூறி உங்களை கவிழ்ப்பார்கள். இவர்களிடம் இருந்து முழுமையாக ஒதுங்கிவிடுங்கள்.

Related Posts

Leave a Comment

Translate »